பக்கம்:மதன கல்யாணி-3.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 87 அந்த அம்மாள் தன்னிடத்தில் மிகுந்த பகைமையும் ஆத்திரமும் பாராட்டிக் கொண்டு வநதிருப்பாளோ என்றும், அவளிடத்தில் இருந்து தான் எப்படித் தப்பிப் போகிறதென்றும் எண்ணி அதுகாறும மிகுந்த சஞ்சலமுற்றிருந்த மதனகோபாலன் அவளது எதிர்பாராத அன்பையும் பணிவான சொல்லையும் உணரவே, தான் அவளுக்கு என்ன மறுமொழி சொல்லுகிற தென்பதை அறியாமல் அவன் தத்தளித்துக் கீழே குனிநதான். அவனது மனம் முன்னிலும் அதிகரித்த நெகிழ்வை அடைந்தது. பரமவிரோதி யானாலும், காலில் விழுந்து மன்னிப்புக் கேடபானாகில் அவனை கூடிமிக்க வேண்டுவதே உத்தமலகூடிணம் என்பதை அவன் அறிவான் ஆனாலும், தனது இளம் பிராயத்திலிருந்து தன்னை வளர்த்துப் பிள்ளையைக் காட்டிலும் அதிக வாத்சல்யத்தோடு பாதுகாத்துக் காப்பாற்றி வரும் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தார் வேணடும் எனறே செய்திருக்கும் அந்தக் காரியத்தில் அவரது அனுமதியின்றித் தான் எவ்விதமான ஏற்பாட்டிற்கும் இணங்கக் கூடாதெனற எண்ணம அவனது மனதில் எழுந்து போராடியது. இல்லாதிருந்தால, அவன், தான எல்லாவற்றையும் மறந்து விட்ட தாகவும், மேல் நடவடிக்கை நடத்துவதை நிறுத்திவிடுவதாகவும் சொல்லிவிடக்கூடிய தயாள குணமுடைய மனிதனே. ஆனாலும் அவன் எந்த வழியிலும் போகமாட்டாமல் மெளனமாக நின்றான். உடனே கல்யாணியம்மாள் முன்னிலும் அதிக அன்பாகப் பேசத் தொடங்கி, "அபபா மதனகோபாலா! என்னோடு பேசக் கூடாதென்று கூடவா உறுதி செய்து கொண்டிருக்கிறாய்? கேவலம் கொலைக் குற்றம் செய்த மனிதராக இருந்தாலும், அவர்களிடத்திலும் பேசுவார்களே, நானென்ன அதைவிடப் பெரிய குற்றமா செய்துவிட்டேன்! நான் வணடியில் உட்கார்ந்து கொணடிருக்கிறேன். நீ பாட்டையில் நின்று கொண்டிருப்பதைக் காண என் மனம் சகிக்கவிலலை. ஆனால, உன்னை வண்டிக்குள் உடகார வைத்துக் கொணடால், அதை காணும் மூட ஜனங்கள் ஏதாவது வித்தியாசமாக நினைத்துக் கொள்வார்கள். முதலில் நீயே என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொள்வாய். உலகம் அப்படிக் கெட்டுப் போயிருக்கிறது. எங்கே பார்த்தாலும் விபசார குணமே மலிந்து போயிருக்கிறது. உலகத்தில் நல்லது கெட்டது