பக்கம்:மதன கல்யாணி-3.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 மதன கல்யாணி தெரியாமல் எல்லாம் பிசரிக்கொண்டு கிடக்கிறது. ஒருவனிடத்தில் ஒருத்தி துன்மார்க்கமான எண்ணத்தோடு அன்பைக் காட்டி உபசரிக்கிறாளா என்பதற்கும் அவனிடத்திலுள்ள நல்ல நடத்தை யையும, கல்வித் திறத்தையும், புத்தி விசேஷத்தையும், அழகை யும் கண்டு கபடமற்ற அன்பும் பிரியமும் வைத்து சந்தோஷப் பட்டு உபசரிக்கிறாளா என்பதற்கும் வித்தியாசமே தெரியாதபடி உலகம் கெட்டுப் போய்விட்டது. குழந்தாய்! - உன்னைக் கூப்பிடும் போதெல்லாம், குழந்தை என்ற பதம் தானாகவே என் வாயில் வந்து நிற்கிறது. என்னுடைய குழந்தைகளைக் கானும் போது என் மனசில் எப்படிப்பட்ட வாத்சல்யம் சுரக்கிறதோ அதே வாத்சல்யம் உன்னை நான் காணும் போதெல்லாம என் மனசில் சுரக்கிறது. அதனால் குழந்தை என்ற பதமே முனனால வநது உதட்டில் நிற்கிறது. உணனை நான் எந்த நிமிஷத்தில கண்டேனோ அதுமுதல் இது பரியந்தம் நான உனனிடத்தில் வித்தியாசமான எண்ணம் கொண்டிருந்தால், அந்த ஈசுவரன் என்னுடைய இரண்டு குழநதைகளையும் கொண்டு போகட்டும். நானும் கண்ணவிந்து சீரழிந்து ஆயிரங் காலத்துக்குத் திண்டாடித் தெருவில் நிற்பேன். பிரமாணமாகச் சொல்லுகிறேன்; உன்னை நான் ஒரு குழந்தை என்று நினைத்ததைத் தவிர, வேறே விதமாக நினைக்கவே இல்லை. அப்படி நான் நினைக்க, முக்கியமாக ஒரு எண்ணம இருக்கிறது. நான் முன்னே சொன்ன சகலமான அம்சங்களும் உன்னிடத்தில் பொருந்தியிருப்பதோடு, உன் முகமும் கண்களும் என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளினுடைய முகம் போலவும் கண்கள் போலவும் தத்ரூபம் அப்படியே இருப்பதால், உன்னை நான் காணும்போதெல்லாம் என் மனம் என்னை மிஞ்சி ஒருவிதப் பரவசமடைந்து உருகிப்போகிறது. அதே காரணத் தினாலே தான் நான் அன்றைய தினம் மெய்ம்மறந்து உன்னை ஆலிங்கனம் செய்ய ஓடிவந்தது. நீ அதை வித்தியாசமாக நினைத்து விட்டாய். ஏனென்றால் உலகம் அப்படிக் கெட்டிருக கிறது. அதோடு, நான் சொல்லும் காரணம் விவேகிகளுக்கனறி மற்றவருக்கு உண்மையாகப் படாது!" என்று கல்லும் கரையும படியான குரலில் மொழிந்தாள். அதற்கு அநுசரணையாக அவளது கண்களினின்று கண்ணிர்த் துளிகள் மளமளவென்று கீழே வீழ்ந்தன.