பக்கம்:மதன கல்யாணி-3.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 91 கிறார்கள். அவர்களுடைய மனசு இப்போது மாறினாலும் மாறலாம்" என்று மிகுந்த அன்போடு கூறினான். அதைக் கேட்ட கலயாணியம்மாளது முகம் சடக்கென்று மாறுபட்டது. "நேற்று நடந்த சம்பவம்" என்று மதனகோபாலன் சொனனதிலிருந்து, தனது பங்களாவில் துரைஸானியம்மாளினது சமபந்தமாக நடந்த விஷயங்கள் எல்லாம் ஊர் முழுதும் பரவியிருக் கிறதென்று எண்ணிக் கொண்ட கல்யாணியம்மாள் மிகுந்த கிலேசமும சளுசலமும் அடைந்தவளாகச் சிறிது நேரம் தத்தளித் திருந்த பின் மறுபடியும் அவனை நோக்கி, "உன்னை அபிமான புத்திரனாக வளர்த்து வருபவர்கள் யார்?" என்று நயமாகக் கேட்க, மதனகோபாலன், "அவர்கள் தான், கிருஷ்ணா-இல்லைபசவண்ண செட்டியார்" என்றான். அதைக் கேட்ட கல்யாணியம்மாளது தேகம் முன்னிலும் அதிகமாகக் குன்றியது. அவள் அவனை நோக்கி, "நேற்று நடந்த சம்பவத்துக்குப் பின்னால் அவா என் விஷயத்தில் அனுதாபப் படுகிறார் என்றாயே! அது என்ன விஷயம்?" என்று வினவினாள். உடனே மதனகோபாலன் வியப்புற்று அவர்களை உற்று நோக்கி, "என்ன ஆச்சரியம்! தாங்கள் பேசுவதைப் பார்த்தால், நேற்று நடந்த விஷயம தங்களுக்குத தெரியாது போலிருக்கிறதே! இங்கே நடந்த விபரீதச் சங்கதியைத் தங்களிடத்தில் யாரும் சொல்ல வில்லையா? அது தங்களுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் தெரிய வேண்டிய சங்கதியல்லவா!" என்றான். அவன பேசிய பதைப்பிலிருந்து மிகுந்த சஞ்சலமும் கலக்கமும் அடைந்த கல்யாணியம்மாள், "எனக்கு ஒரு சங்கதியும் தெரியாதே! என்ன நடந்தது? எங்கே நடந்தது?" என்று மிகவும் பதறிக் கேட்டாள். உடனே மதனகோபாலன், "ஆகா! அந்தச் சங்கதியைக் கேடடால் தாங்கள் நிரம்பவும் விசனப்படுவீர்கள். அதை நான் எப்படி வெளியிடப போகிறேன்" என்று பீடிகை போடடுச் சிறிது நேரம் மெளனம் சாதித்தவனாய், "அம்மணி தங்களுடைய குமாரர் மைலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். தாங்கள்