பக்கம்:மதன கல்யாணி-3.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 மதன கல்யாணி காலதாமதமின்றி நேராக அங்கே போங்கள். எல்லா விஷயங்களும் நன்றாக வெளியாகும். அங்கே இப்போது விசாரணை நடக்கிறது. அதற்காகத்தான் பசவண்ண செட்டியார் போயிருக்கிறார்" என்றான். அவன் சொன்ன வார்த்தையைக் கேட்கவே கல்யாணியம் மாளினது மனம் ஒரு விதத்தில் அமைதியடைந்தது ஆனாலும், இன்னொரு விதத்தில் ஆவல் கொண்டது. தன்னுடைய பங்களாவில் நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி அவன் பேசவில்லை என்பதும், அவைகள் அவர்கள் வரையில் எட்டவில்லை என்பதும் அவளது முக்கியமான கவலை. தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்துப் பலவகையில் முயற்சிகள் செய்து வருகிறான் என்பதை அவன் துரைராஜாவுக்கு எழுதிய கடிதத்தி லிருந்து தெரிந்து கொண்டது முதல், அவனது விஷயத்தில் அவள் மிகுந்த அருவருப்பும் கோபமுமடைந்திருந்தவளாதலால் அவன் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்பதைக் கேடட வுடனே, அவள் அவ்வளவாகக் கவலைப்படாமல், அவன் பலவிடங்களிலும் மாட்டிக் கொண்டு துன்பப்பட்டால் அவனுக்கு நல்ல புத்தி வரும் என்ற நினைவைக் கொண்டவராய், அதை அலட்சியமாக மதித்து, "ஓகோ அப்படியா! அந்தப் பெரியவர் போலீஸ் ஸ்டேஷனிலா இருக்கிறார்! இருக்கட்டும்; எப்படியாவது கெட்டழியட்டும. துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் தான் புத்தி சொல்ல வேண்டும்" என்று மறுமொழி கூறினாள். அதைக் கேடட மதனகோபாலன், "அம்மணி அவர் எவ்வளவு தான் கெட்டவராக இருந்தாலும், இந்தச் சமயத்தில் தாங்கள் இப்படி அசிரத்தையாக இருப்பது பிசகு, அவா செய்திருக்கும் குற்றம் சாதாரணமான குற்றமல்ல. அதனால் அவருக்கும் உங்களுக்கும் மகா விபரீதமான அபாயம் நேரும் போலிருக்கிறது. தாங்கள் முதலில் அந்த விஷயத்தைக் கவனியுங்கள. மற்ற விஷயத்தை சாவகாசமாகப் பேசிக் கொள்வோம்" என்று மிகுநத கவலையும் அச்சமும கலக்கமும் தோன்றக் கூறினான். அவன் அவ்வாறு பேசியதைக கேட்ட பிறகே, கல்யாணியம மாளினது மனதில் பெருத்த திகில் உண்டாயிற்று; அவள் அவனை நோக்கி, "அவன் அப்படி என்ன விதமான விபரீதக் குற்றத்தைச்