பக்கம்:மதன கல்யாணி-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 95 எதிரில் தெரிகிறது பார். அதிலிருந்து நான் உலாவுவதற்காக இப்போது தானே வெளியே வந்தேன். நீங்கள் என்னைப் பிடித்துக் கொண்டீர்களே? என்ன வயணம் ஒன்றும் புரியவில்லை போலிருக்கிறது? என்னை விடுங்கள்; நான் பங்களாவுக்குப் போகிறேன்" என்று கூறித் தன்னை விடுவித்துக் கொள்ள முயல, போலீஸ்காரன், "அடெபோ ஒய்! உன்னைத் தெரியும் எங்களுக்கு. இந்தச் சரக்கெல்லாம் இங்கே விலை போகாது. நட! ஸ்டேஷனுக்கு" என்று கூறி அதட்டிய வண்ணம் ೨೧೯ಾಣಹ கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இழுக்க, அவன வர மாட்டேன் என்று பிரமாதமான முரண்டல் செய்யத் தொடங்கினான். போலீஸ் ஜெவான் மற்ற ஆள்களைப் பார்த்து, "நீங்களும இதுவரைக் கொஞ்சம் பிடித்துக் கொள்ளுங்கள்; மோட்டாரில போனவர்கள், ஸ்டேஷனுக்குப் போய் இந்தச் சங்கதியைச் சொனனால், சப் இன்ஸ்பெக்டராவது வேறே யாராவது விலங்கை எடுத்துக கொண்டு உடனே புறப்பட்டு இன்னமும் கொளுச நேரத்திற்குள வநதுவிடுவார்கள. அதுவரையில் பிடித்துக் கொள்ளுங்கள்" எனறான். உடனே ஆட்களும் மைனரைப் பிடிக்கப் போக, மைனர் வீராவேச மடைந்தவனாய், "அடேய! நாய்களா! நீங்கள் யார் என்னைத் தொடுவதற்கு? என்னைத் தொட உங்களுக்கு அதிகாரமே இல்லை. தொட்டால் நாளைக்கு பலி போட்டுவிடச் சொல்லுவேன்" என்று கூறிய வணணம் மிகுந்த கோபத்தோடு அவர்களை உதைக்கவும் குத்தவும் முயல, அவன் ஜெமீந்தாரினது வீட்டுப் பிள்ளையாயிற்றே என்ற மரியாதையினால் அவர்கள் அதிக பலவந்தம் செய்யாமல் தயங்கி நிற்க, மைனர் போலீஸ் ஜெவானது பிடியை விலக்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கையில், ஜெமீந்தார் தென்புறத்தில் தற்செயலாகப் பார்த்து, "அதோ குதிரையில் வந்துவிட்டார்!" என்று வியப்போடு கூறினார். அதைக் கேட்ட யாவரும் திடுக்கிட்டு முன்புறத்தில் பார்க்க, மைனர் முன்னிலும் அதிகமாகத் திமிறத் தொடங்கினான். இரண்டொரு நிமிஷ நேரத்தில் குதிரை அவா.களிருந்த இடத்திற்கு வந்து சோந்தது. அதன் மேல் ஒரு போலீஸ் சார்ஜண்டு துரை உட்கார்ந்திருந்தார். அவரது வலது கையில், வெள்ளிப் பூண் கட்டப்பட்ட மெல்லிய ஒரு பிரம் பிருந்தது. இடது கையில் ஒரு பீடியை வைத்துக் குடித்துக் un.65.III-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/99&oldid=853502" இலிருந்து மீள்விக்கப்பட்டது