பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மதுரைக் குமரனர் யுதவும் உயர்ந்த மனப்பண்பு இக் கோயமானிடத்தில் அமைந்து கிடந்தது. மேலும், இவன் இல்லார்க்கும் உடையார்க்குப்போல இங்கிலவுலகில் பசியின்றி வாழ உரிமையுண்டெனக் கரு தும் உரவோன். உடையார்க்குளதாகிய உடைமை அவர் தம் வலியுடைமையால் உண்டாயதாயின், அவ்வ்லிபெற்ற தன் பயன், அவர் தாமே தமித்துண்டு தமது வயிறு நிரப் புவதன்றெனக் கருதினன். வலியுடையார் வலியில்லாமை யால் வறுமையுறுவோரது பசியை நீக்கி இவ்வுலகில் வாழச்செய்வது கடன் என்று எண்ணி அதற்கேற்ப ஒழு கினன். அதனல், என்றும் படையேந்திச் சென்று, வலியுடைமையாற் செருக்கி மகிழ்ச்சி மிகுவாருடன் போருடற்றி, அவரை வென்று அவர் நல்கும் பொருளைக் கொணர்ந்து தன்னையடைந்தார்க்கு ஈந்து இல்லோர் சொல்மலை ” எனும் வண்புகழ் வளர்த்து வந்தான். இவனது புகழ் பாணர் கூத்தர் முதலிய பலராலும் நாடு முழுதும் பாப்பப்பட்டது. இன்மையுற்று வரும் இாவலர்க்கு வேண்டுவன தந்து அவரது இன்மை தீர்க்கும் கடமையால் இடையீடின்றிப் போர் செய்வதே தொழி , லாகக் கொண்டிருந்தமையின், இக் கோயுமானுடைய உடல் முற்றும் விழுப்புண் பட்டு வ்டு மலிந்திருந்தது. ஆயினும், ஆண்மை மாசுபடாமையின், வாள்வடு மயங்கி விடுவின்று வடிந்த யாக்கை” யுடையனப் விளங்கினன். இச்செல்வன்பால் ஒருகால் பொருட் குறைபாடுண்டாயின் அவன் போர்க்குச் சென்றிலன் என்று கருதவேண்டும்; போர்க்குச் செல்லவில்லையெனின், அவனுடைய படைக் கருவி வடிக்கப்பட்டில; கொல்லன் உலேக்களத்துள்ளன எனல் வேண்டும். சுருங்கச் சொல்லுமிடத்து, இல்லோ ாது இன்மை தீர்த்து, அவரும் ஏனை உடையோர்போலப் பசியின்றி வாழ்தல் வேண்டுமெனப் போர்மேற்கொண்டு எப். பொழுதும் தன்னுயிரை இல்லாதார் பொருட்டு ஈதற்கு ஈடு படுத்தி ஈர்க்தையூரில் வாழ்ந்துவந்தான் ஈர்ந்தார் கிழான் கோயமான் என்பது மிகையாகாது. இல்லோர் வரிசையுள்