பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


செல்வர் தொடர்பு 97 - முன்னணியில் இருப்பவர் பாண்மக்களாதலின், பாணர் பொருட்டு உயிர்வாழ்ந்த பண்பு நோக்கி, இவனைப் '.பாண் பசிப்ப்கைஞன் ' என்பது சான்ருேர்க் கியல்பாயிற்று. - இடையருது போர்செய்தலால் கோயமானுக்கு வேல் முதலிய படைகள் நாடோறும் வடிக்கப்பட வேண்டி யிருந்தன. வேல் வடித்துக் கொடுத்தல் ஊர்க்கொல்லர்க் குக் கடனே. ஆயினும், நாடோறும் வடித்துக் கொடுத் தில் வேண்டுமெனின், எத்தகைய கொல்லர்க்கும் சிறிதே லும் வருத்தமுண்டாகாமல் இராது. அதனை யறியுங் தோறும் கோயமான் அக்கொல்லருக்குத் தன் பால் வரும் இரவலரது பசித்துன்பத்தைக் காட்டியும், எடுத்தோதியும், இவர்களது பசித்துன்பத்தைப் போக்குதற்கு நீ வடித் துத் தரும் வேல் பயன்படுகிறது; இந்த கினது வேல் வடிக்கும் பணி, இல்லாது இன்மை தீர்த்து, இன்ப வாழ்வு பெறுவிக்கும் நற்பணி” எனக் கூறியும் ஊக்கம் கொளுத். தினன். இச்செயல் கானுந்தோறும் மதுரைக் கும்ாஞ்ர் அவன் மனையில் இருந்து வருகையில், மதுர்ைக் குமரனர் தமது இயற்கைப்படியே சூழவுள்ள ஆர்களுக்குச் சென்று மக்கள் செயல் கலங்களைக் கண்டு வருவார். ஒரு நாள் வேற்றார்க்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந் .தார். வழியில் வறுமையால் மெலிந்து வருந்தி வரும் முதிய இரவலன் ஒருவனேக் கண்டார். தனது வறுமைத் துன்பத்தை அவன் கூறக் கேட்டார் நம் குமரனர். அவன் பால் கழிவிரக்கம் கொண்டார். "இரவல், கினது வறுமை நீங்கவேண்டின் என்னெடு வ்ருக, இரவலராகிய பாண்ர் முதலாயினரது பசிக்குப் பகைவன் ஒருவன் ஈர்க்தையூரில் உள்ளான். அவன் நாடோறும் தொடர்ந்து கொடை வழங்கும் அத்துணைப் பெருஞ்செல்வ முடையனல்லன். ஆயினும், இரப்போர்க்கு இல்லையென்று மறுப்பதும் காப் பதும் செய்யும் இழிகுணம் உடையவனும் அல்லன். தனக்குத் தலைவனுகிய வேந்தனுக்கு உறும் இடும்பைகளைத் தாங்கும் அறவுணர்ச்சி நிறைந்தவன். அவ்வப்போது ம. கு.-7 - -