பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மதுரைக் குமானுர் நிகழும் போர்களில் பகைவர் எறியும் படைகளால் புண், புட்டு வடுவுற்ற யாக்கையுடையன். ஆல்ை, ஆண்மை மாதபடாமையால் மறநெறி வழுவாத வன்ப்பு வாய்ந்த ஆன். இல்லையென இரப்போர்க்கு இயல்வது காவாது கொடைக்கடன் பூண்டிருக்கின்றன். யாங்கள் எங்கள் வறுமையைக் கூறி அவனை இரப்போமாயின், அவன் உடனே தன்னுார்க் கொல்லனே வருவித்து, அவற்கு எமது உண்ணுவயிற்றைக் காட்டி, இவர்களது பசி தீர்த்தல் வேண்டிப் பொருள் கருதிப் போர்க்குச் செல்வேன் என் வேல்களை வடித்துத் தருக என வேண்டுவன். இங்ங்னம், இரவலர் வறுமை தீர்ப்பது பொருளாகப் போரில் உயிர் கொடுக்கும் உயர் திருவாளனே நீயும் வந்து காண்’ என்று. கூறி, இக்கருத்தமைந்த பாட்டொன்றை யமைத்து, ...: நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே! இல்லென் மறுக்கும் சிறுமையும் இலனே; இறையுறு விழுமம் தாங்கி, அமாகத்து இரும்பு சுவைக்கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள் வடு மயங்கி வடிவின்று வடிந்த யர்க்கையன் ; கொடையெதிர்ந்து ஈர்ங்தை யோனே, பாண்பசிப் பகைஞன் இன்மை தீர வேண்டின் எம்மொடு நீயும் வம்மோ, முதுவாய் இரவல! யாம்தன் இாக்குங் காலத் தான்,எம் 'உண்ணு மருங்கு காட்டித் தன்னுார்க் கருங்கைக் கொல்லனை இாக்கும் திருந்திலே நெடுவேல் வடித்திசின் எனவே" என்று பாடினர். வந்த இரவ்லனும் ஒரு பாண் மகன்த லால், அப்பாட்டிற்கு இசை வகுத் துப் பாடினன்: இருவரும் கோயமானிடம் சென்றனர். அது கேட்டுப் ப்ேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்த கோயமான் பாண னுக்குப் பொன்னும் பொருளும் தந்து சிறப்பித்தான். மதுரைக் குமானரும் அவன்பால் சிறந்த பரிசில் பெற்று விடையும் பெற்றுக்கொண்டு சேரநாட்டுக்குச் சென்று, சேரமான் குட்டுவன் கோதையைக் கண்டு, அவன் தந்த