பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 மதுரைக் குமரனர் பண்ணின் பத்தில் மூழ்கிக் குமரனுரைக் கண்டு கழிபே வகை கொண்டான். கொண்டவன், குமரனுர்க்குக் களிற்றுப் பரிசி லொன்று நல்கி, அவர் தன்னைப் பிரியா வகையில் பிணித்துக்கொள்ளக் கருதினன். போர். யானைகொண்டு அறப்போர் புரியும் அடல்வேலனுதலின், திருக்குட்டுவன் கன்பாலுள்ள களிறுகளிற் போருடற்றிப் புகழ்சிறந்த வெஞ்சின வேழமொன்றைத் தேர்ந்து நம் மதுரைக் குமானுர்க்கு நல்கினன். குமரனுர் அவ் யானே யைச் சென்று கண்டார். அது வெஞ்சினம் தணியாது. வீறுகொண்டு நின்றது. அவர்க்கு மனத்தே அச்சி முண்டாயிற்று. இக்களிறு தம் க்கு உதவாதென. எண்ணிப் பாகனே அழைத்து இதனே அரசனிடமே சேர்த்து விடுக’ என்ருர். - வேழப்பரிசில் மீளத் தன்பல் திரும்பிவரக்கண்ட, திருக்குட்டுவன் முதற்கண் திகைத்தான். சிறிது நீள், எண்ணினன். ' என் தகுதிக்கும் தனது வரிசைக்கும். ஒவ்வாது குறைந்ததெனக் கருதிக் குமரனுர் இவ்வாறு: செய்தார் போலும்’ என முடிவு செய்தான். வரிசையும் தகுதியும் நோக்காமையாகிய குற்றம் தன்பால் உண். டர்னதென்று திருக்குட்டுவன் நாணினன். முன்னே. தந்தது போல்வதொரு களி ற் றி னே ப் பண்ணுமாறு: பாகரைப் பணித்தான். பக்கத்தில் மணி மாறி யொலிக்க, நெற்றிப் பட்டத்தோடு பொன்னரிமாலை கிடந்தசைய, மருப்புக்களில் கிம்புரி இருந்து அழகு செய்ய, பண்ணுத லமைந்த களிறு இரண்டனையும் குமானுர்க்குப் பரிசி ல்ென விடுத்தான். களிறுகளும் அவை சுமந்த பொன்: லும் பொருளும் துகிலும் குமானுர் எதிர்பாராவண்ணம் வந்து சேர்ந்தன. மதுரைக் குமரனுர் திருக்குட்டுவனது மனமாட்சியை பெண்ணிஞர். தாம் பாடியவற்றையும் பிற நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தார் ; உவகையாற் கலுழ்ந்தார்; அவர் புலமையுள்ளத்தில் வியப்பும் உவகை யும் மாறிமாறி உண்டாயின. ஏனைப் பாடல் சான்ற புலமைச் சான்ருேரை நினேந்தார். அவர்கள் அனைவரும்