பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 மதுரைக் குமரனும் ஏனுதி திருக்குட்டுவன் வலிய வில்லையெடுத்து வளைத் தாளுதல்ால் அகன்ற தன் மார்பின்கண் சாங் தணிந்து, தண்ணிய அருள் மேவிய உள்ளத்தன் என அவன் மெய்க் நலத்தை, சிலையுலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்' என்ருர், இச்சொற்ருெடர் நலத்தைச் சுவைத்து வியந்தி காப்பியப் பாவலரான திருத்தக்கதேவர், தாம் சிறப்பித் துப் பாடிய சிவகனே சிலபுலாய் கிமிர்ந்த மார்பன்' என: இத்தொடராற் குறித்திருப்பது தமிழறிஞர்க்குப் பேரின் பங் தருவதொன்று. இக்குட்டுவனுக்குரிய வெண்குடை யென்னுமூர், மலைநாட்டதாயினும் நெல்வளம் மிக்க நீர்மை, யுடையதென்று விளங்குமாறு, ஒலி கதிர்க் கழனி வெண் குடை ' என்ருர். இவ்வில்லேருழவற்குச் சிலைவன்மையும் நெல்வளம் சுரக்கும் வெண்குடையுரிமையும் ஒருபால் விளங்க, ஒரு பால் இரவலர்க்கு ஈதற்கென அமைந்து விளங்கும் தைக் நலத்தை வலிதுஞ்சு கடக்கை யெனச் சிறப்பித் அக் கை வாட்போரிலும் வல்லதென்பது தோன்ற வாய். வாள் குட்டுவன் ' என்ருர், இங்ங்னம் தோள்வன்மையும் கை வண்மையும் ஒருங்கு குடையார்க்கு வையக முழுதும் புகழ் பரவுவது ஒருதல்ை யாகலான் வாய்வாள் குட்டுவன் வையகம் புகழினும்,' என்றும், அத்தகைய புகழுடையோனே உயர்ந்த புலவ ரன் வரும் கண்டு பரவ விரும்புவது இயல்பாதலால், அவன்ர் நோக்கி, அவ்வாறு செய்யன்மின் என விலக்குவார்போல் ' உள்ள ல் ஒம்புமின் உயர்மொழிப் புலவீர் ” என்றும் கூறினர். இது மறை முகமாக உயர்மொழிப்புலவர் ஒருங்கு திரண்டுவந்து, தங்கள் உயர்மொழியால் இக்குட்டுவ னது புகழுடம்பை உயர்மொழிப்புலமைச் செய்யுளால் உருப்படுத்தி நிலைநிறுவுதல் வேண்டுமெனப் பணிக்கும் தமிழ்ப்பணி. - வண்மையாற் புகழ்வளர்க்கும் வள்ளியோனுகிய திருக் குட்டுவனேக் காணவிரும்பும் உயர்மொழிப் புலவர்களை