பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. மதுரைக் குமரனுர் பொருளும் அத்துணேச் சிறப்பு இல என இக்காலத்தே பேசியும் எழுதியும் திரிபவர்போலப் பண்டைத் தமிழ் மக்கள் அறிவு அறைபோகியவர் அல்லர் ; இசை க்ருவி யாக அதல்ை உள்ளத்துக்கு நல்கப்படும் பொருளிலும் அவரது கருத்து ஊன்றியிருந்தது : மக்கள் எழுப்பும் இன்னிசைக்கும் ஏனைப் புள்ளினங்களும் உயிரில்லாத இசைக்கருவிகளும் எழுப்பும் இன்னிசைக்கும் பொருள் புணர்ந்தெழும் பாட்டொடு பிறந்த இந்த் இன்னிசை இயல் வேறுபட விளங்கவேண்டும் என்று அங்காளைய அறிவுடைய கன்மக்கள் கருதினர். அக்கால இயல்புக் கேற்பத் தாம் பாடிய பாட்டின் பொருள் இது எனக் குறிப்பதற்காக, தந்தை வாடா வஞ்சி பாடினேன் ' என்ருர், திருக்குட்டுவனுக்குத் தந்தை தனக்கென்று. அமைந்த தேரும் ஒலிக்கும் முரசும் உடைய பேரரசன் என்பது விளங்க பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை' எனவும், மைந்து பொருளாக மண்ணச்ைகொண்டு ஏனைப் பகைவர்ம்ேற் சென்று போருடற்றுவது வஞ்சி யென்ப் படுமாகையால், அதனை "வாடா வஞ்சி யெனவும் குறித். தார். அப்போரில் வஞ்சிப் பூவைச்சூடிப் போர்செய்வது. மரபு. அதனல் அது வஞ்சியெனப்பட்டது. ஒரு காலத்தே ஆங்கிலேயர் தாம் செய்த போரில் ரோசாப் பூவைச் சூடிக்கொண்டு போர் செய்தனர். அதற்கு, ரோசாப்பூப் போர் (Wars of the Roses) என்று பெயர் கூறினர். இங்கே வஞ்சியென்பது வஞ்சிப்பூ வன்று: வஞ்சி சூடிச்செய்யும் போர் என்பதற்காக, வாடாவஞ்சி' என்ருர். இளையோர்க்குப் பொதுவாகவே தம்முடைய குடியிற் பிறந்த முன்னோது புகழ் கேட்டவழி, அவ டைய உள்ளம் உவகையால் மலிவது இயல்பு. அம் முன்னேரிலும் புகழப்படுபவர் தம்மைப் பெற்ற தந்தையே யாகிய வழி, உவகை பெரிதாமென்பது சொல்ல வேண்டா, உவகை மிகுதியால் தனக்கும் குமரனருக்கும் பிரியாது நெருங்கிய நட்புண்டாக வேண்டினுனென்பது தோன்ற, " அகமலி உவகையோடு அணுகல் வேண்டி' என்ருர், வேள்பாரிக்குக் கபிலரும், அதியமானுக்கு ஒளவையும்