பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்லிசைப் புலமைச் சான்ருேர் 13 "இங்கிலம் வேந்தர் படைப்பன்று; கடவுள் படைப்பு, நலஞ் செய்தார்க்கு இன்பமும் தீமை செய்தார்க்குத் துன்பமும் உண்டாகுமாறு செய்யும் கடவுள் போல, கிலவேந்தர் குடி களின் குறை நீக்கி முறை செய்து கல்லோர்க்கு அளியும் தியோர்க்குத் தெறலும் வழங்குவது முறை ; அதனுல் இந் நிலம் எல்லா வேந்தர்க்கும் பொது ' என்று கூறுவது முண்டு, வலியுடை வேந்தன் பொதுச்சொல் பொருது” போர் உடற்றி வலி குறைந்த மன்னனது நாட்டைத் தன் அடிப்படுத்தினன். கிலம் சூழ்ந்த கடல் மக்கள் வாழ்தற் குரிய இடமாகாதாயினும், கலத்திற் சென்று வேற்று நாடு களிலிருந்து பொருள் கொணர்ந்திட்டுதற்கு வாயிலாத லால், அதுவும் பொதுவாகாது என அதன்மேலும் தன் ஆணை செலுத்தின தமிழ் வேந்தரும் உண்டு. சினமிகு தானே வான்வன் குடகடல், பொலந்தரு நாவாய் ஒட்டிய அவ்வழிப், பிறர்கல்ம் செல்கலாது” (புறம் கஉ சு) என்று சான்ருேர் கூறுவது காண்க. இக்கருத்தால் தமிழ் வேந்தர்க்கு வலி பெறுவதிலே பெரு நோக்க முண்டாயிற்று. அவ்வலி, தோள்வலியும் பொருள் வலியும் என இருவகையில் பெரிதும் இயன்றது. தோள்வலி பன்டப் பயிற்சியால் உண்டாவது. பொருள் வலி குடிமக்கள் விளேத்துத்தரும் பொருளால் வருவது. அதுகொண்டு வேந்தர்க்குப் படைவீரரும் துணைவரும் உள ராயினர். அவர் பாலும் தோள்வலியே பெரிதும் எண்ண்ப்பட்டது. பொருளை எளிதிற் பெறுங் கருத்தால், முடிவேந்தர் மூவரும் தம் நாடுகளைச் சிறுசிறு நாடுகளாக்கி வலிமிக்க தலைவர் தலைமையின்கீழ் இருப்பித்துப் பொருள் பெருக்குதலில் கண்னுடையாய் அதுவாயிலாக நாட் டைப் பரப்புவதில் பெருநோக்க முடைய ராய் விளங்கினர். இவ்வகையில் வேந்தர்கட்கும் வேத்தியல் தலைவர்கட்கும் கல்விப் பேற்றில் கருத்து மிகுதியும் செல்லாதாயிற்று. வேந்தர்களிற் பெரும்பாலாரும் கல்வர்களிற் பலரும் சிறி தளவே கல்வி கற்றமைந்தனர். ' குலவிச்சை கல்லாமலே பாகம் படும்” என்ற கருத்தும் அவர்கட்குத் துணை