பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 மதுரைக் குமரனுர் போல எழுத முற்பட்டு விட்டனர். கல்வெட்டில் கலக் கும் கிரந்த எழுத்துக்கள் இல்லையேயொழிய அவ்வெழுத் தாலமைந்த சொற்களைத் தமிழெழுத்தால் எழுதுகின்ற னர். இதல்ை இவர்கள் உள்ளம் பிறமொழிக் கடிமையா யிருக்கும் தன்மை நீங்கப்பெற்றிலதென்றும், எனவே நாட்டுப்பற்று நன்கு அமையவில்லையென்றும் காணலாம். ஆங்கிலேயர்களுக்கு உரிமை யுணர்வு தோன்றிய பன்னெடுங்காலத்துக்கு முன், கிரேக்க உரோமானியர் களுக்கு அடிமையாயிருந்தனர். அக் காலத்தே அவர் கள் மொழியில் லத்தீன் மொழிச்சொற்களும் கிரேக்க மொழிச் சொற்களும் கலந்துகொண்டன. உரிமை புணர்வு தோன்றி வேர் கொண்ட பின், அவர்கள் அம் மொழிகளை விலக்கித் தூய ஆங்கில மொழியில் எழுதவும் . பேசவும் மேற்கொண்டனர். அவர்கட்கு அண்மையி, லுள்ள பிரெஞ்சு, சருமனி முதலிய நாட்டு மக்களின் கூட்டுறவால் அவர் மொழிச் சொற்களும் தங்கள் மொழி யில் வந்து கல்க்கக் கண்ட அந்த ஆங்கிலேயர் அவற்றைத் தங்கள் மொழிநடைக் கேற்பச் சிதைத்தமைத்துக் கொண் டினர். அவர்களே யடியொற்றிச் செல்லும் நம்மவர், அவ் ருடைய அந் நற்பண்பைக் கொள்ளா தொழிந்தது இரங்கத் தக்கதாம். தங்கள் மொழியைப் பிழையின்றித் தாய் வகையில் எழுதவும் பேசவும் வேண்டுமென்ருல், அவ்வாறு வேண்டுவோர், மொழிபயிலும் தங்கள் நாட்டின்மேல் அன்புடையாாதல் வேண்டும். நாட்டுப் பற்று நாட்டு மொழியின்பால் பற்றும் அதனே யழகுற எழுதவும் பேசவும் வேண்டுமென முயலும் முயற்சியும் தோற்று விக்குமென மேனுட்டறிஞரான பேராசிரியர் ஆதம்சு என்பவர் கூறியுள்ளார். - ஆங்கிலப் பயிற்சி மிகுந்து அம்மொழி காட்டும் நெறியே கற்பன கற்று நம் காட்டின்கலம் காண விழைப வர்க்கு அவ்வாறே நம் நாட்டின்பால் அன்புண்டாக வேண்டும். நாட்டுக்குத் தொண்டாற்றுவோ ரென வரும் தலைவர் பலரும் நம் நாட்டு மொழியின் பால் நன்மதிப்புடைய