பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்லிசைப் புலமைச் சான்ருேர் 19 ‘ராகவேண்டும். لتقي من قي அம்மொழி பயின்று விளங்கும் புலவரிடத்தே அவர்கள் காட்டும் நன்மதிப்பால் தெளிவா கும் பண்டைத் தமிழ் வேந்தர் புலவர்கட்குச் செய்த சிறப்புக்களால் அவர்கள் தங்கள் தமிழ்மொழியின்ப்ரில் பேரன்பும் அது வாயிலாகத் தங்கள் நாட்டின்ப்ால் பேரார்வமும் உடையாய் இருந்தனரென அறிகின்ருேம். தமிழ் வேந்தைெருவன், போர் குறித்து வஞ்சினங் கூறுங் கால், ' என்னேடு பொாவந்து கிற்கும் பகை வேந்தரை இப்போரில் வென்று புறங்காணேனுயின், யான் இறந்து மாறிப் பிறக்கும்போது சிறந்த இத் தென்னுடு, காக்கும் பாண்டியர் குடியில் பிறவேகை,' என்ற கருத்துப் பட, * மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த, தென்புலங் காவு :லின் ஒரீஇப் பிறர், வன்புலங் காவலில் மாறியான் பிறக்கே ’ (புற. எ.க) என்று கூறுவது கொண்டு, தமிழ் வேந்தர்க்குத் தங்கள் தமிழ் நாட்டின்பால் இருந்த பேரார் (வம் தெற்றென விளங்குகிறது. - - * . . . . இங்ங்னம் தமிழகத்தின்பாலும் தமிழ்மொழியின் பாலும் உண்டான பேரன்பால், தமிழ் வேந்தர் தங்கள் மொழிப் புலவரான சான்முேரிடத்துக் கொண்டிருந்த அன்பும் நன்ம்திப்பும் பெரிதும் அறியத்தக்கனவாம். தங், கள் நாட்டு நன்மக்கள் உள்ளத்தெழுந்த எண்ணங்களையும் உரைத்த உரைகளையும் நாட்டிற் காணப்படும் இயற்க்ைக் காட்சிகளையும் மக்களின் வாழ்க்கைகளையும், அதன்கட் காணப்படும் கிறைவு குறைவுகளையும் கிழலோவியம் போல நெஞ்சிற் பதித்துக் காட்டும் பாட்டும் உன்ரயும் வழங்கித் தங்கட்குப் புது வாழ்வு காட்டி யின்புறுத்தின்ர் இச்சான் ருேர். புறத்தே பொறிவழியாகக் காணும் இத்தமிழகத். தைச் சொல்வழியாக நெஞ்சில் தோற்றுவிக்கும் இவர்கள், வழி வழியாக் இத்தமிழகம் தன் சிறப்புக் குன்ருது இயன்று வருதற்கு ஏதுவாகின்றனர் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தார்கள். இவ்வாறு, இம்மையிலே வேறு பிறப்பளித்து இன்பக் காட்சி காட்டி இன்புறுத்தும் இச் சான்ருேர் மறுமை யின்டத்தையும் பெறுவித்தலில் பின்