பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லிசைப் புலமைச் சான்ருேர் 21 வந்தது. மேலும் இவர்கள் எப்போதும் உள்ள நிகழ்ச்சி களே யுள்ளவாறே யுரைக்கும் உண்மை நலம் வாய்ந்தவர். இதுபற்றியே இவர்களை வாய்மொழிப் புலவர்' என வழங்கினர். இச்சிறப்பால் வேந்தர்கள் இப்புலவர் முதலி யோரைச் சிறப்பிப்பது வேண்டியதொரு செயலுமாயிற்று. அன்றியும், நற்செயல் செய்த வேந்தனைப் பாராட்டு தலும் தீச்செயல் செய்தவனேத் துாற்றுதலும் இவர்கள் ஒல்லும் வாயெல்லாம் செய்து வந்தனர். நன்னன் என்னும் வேந்தன் பெண் கொலைபுரிந்த தீச்செயலையும், கோசரென். பார் அவன் மாமரத்தைக் கொன்று அவனே இகழ்ந்த ஏற். செயலேயும், பரணர் முதலிய சான்ருேர் ஏற்றவிடத்தில் தாம் பாடிய பாட்டுக்களில் வைத்துப் பாடியிருப்பது இதற்குப் போதிய சான்ருகும். இதனுல் வேந்தர்கட்கும் பிற தலைவர்கட்கும் இவர்கள்பால் ஒருவகையில் அச்சமும், இருந்ததென்னலாம். - இப்புலவர் பெருமக்கள் வெறிதே பாடிப் பொருள். பெறுவதொன்றே கருத்தாகக் கொண்டவர்ல்லர். புகழ்க் குரிய வேந்தரையும் செல்வர்களையும் காடி காடோறும் சென்று கொண்டிருப்பர். ஆங்காங்கு அவர்கள் தரும் செல்வத்தைத் தம்மையொத்த பிறர்க்கும் பகுத்தளித் துண்டு வாழ்வர். அவர்கள் உள்ளத்தே பொருளினது. அருமை புலப்படுவதே கிடையாது. அவ்வப்போது கிடைப்பதை அவ்வப்போதே செ லவழித் து. மறு போகிற்கு வேறு செல்வரை நாடிச் செல்வர். இவர்கள் எப்போது வரினும் அச்செல்வர்களும் அப்போதெல் லாம் பொருள் தந்த வண்ணமிருந்தனர். செல்வத்துப் பயன் ஈகல் என்பது செல்வர் கொள்கை. புலவர்க்குக் கொடுக்கும் கொடை செல்வாது கடன் என்பது இவர் தம் கொள்கை. இதனைப் ' புலவர் பூண்கடன் ' என்றும் வறியார்க்கு வழங்குவது செல்வர்க்குப் பொதுவாகவுள்ள கடன் என்பது பற்றிக் கொடையைக் கொடைக் கடன் ” என்றும் சான்ருேர் கூறியுள்ளனர்.