பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 மதுரைக் குமானுர் பொழில் வரைப்பு” என்ற அத் தொல்காப்பியரே, “செங் தமிழ்சேர்ந்த பன்னிருகிலம்' என்பதனுல், அவர்காலத்தே இத்தமிழகம் பல சிறு பகுதிகளாகப் பிரிந்திருந்த தென் பது இனிது விளங்குகிறது. தொல்காப்பிய வுரைகாரர்கள், நம் தமிழகத்தே செந்தமிழ் சிலம் ஒரு பகுதியென்றும், இதனைச் சூழ்ந்து பன்னிரண்டு நாடுகள் இருந்தனவென் அம், அவை பொங்கர்காடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காாடு, சீத நாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு என்பனவென்றும் இவையே தொல்காப்பியர் குறித்த, பன்னிருகிலமென்றும் கூறுவர். இந்த நாடுகள் இக்காலத்தே விளங்க அறியும் வகை யில் இல்லை. இக்கால ஆட்சியியலுக்கேற்ப நம் தமிழகம் இப்போது வேறுவகையில் பிரிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகம் தனிச் சிறப்பும் தனித்தொன்மையும் உடைய' தாயினும், வடக்கிலும் மேற்கிலும் தன்னெல்லே சுருங்கி விட்டது. வேற்றுமொழியின் ஆட்சியால், தமிழ்கம் ஏனேத் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் என்ற மொழிவழங்கும் நாடுகளோடு இணைப்புற்றுத் தன்னை மறந்து தன் சிறப்பையும் இழந்து தன்னைத்தானே இனிது ஆண்டுகொள்ளுங் தனியுரிமையும் துறந்து ஒளிம்ழுங்கி யிருக்கிறது. இங்கிலையில் இதன்கண்ணும் சென்னை, செங் கற்பட்டு, தென்னுர்க்காடு, தஞ்சை, திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்துார், சேலம், வடவார்க்காடு, சித்துர் எனப் பல நாடுகளாகப் பிரிந்திருக்கிறது. பிறநாட்டாட்சி வேகத்தில் அடிமை புற்று மடிந்துகிடந்ததனுல், சித்துர்நாட்டின் செம்பாகம் தெலுங்கு மொழிக்கிட்மாய் விட்டது. திருவேங்கடம் எனதே யெனத் தெலுங்குமொழி இரைச்சலிட்டுப் பேசு தற்கும் தமிழ் கனது இடத்தையிழந்து எக்கற்று கிற்கிறது. எனினும், தன் வடவெல்லையாகிய வடவேங்கடத்தை, அக் தெலுங்கு திருமலே திருப்பதி யென வாயால் வழங்கித் தனக்கு அதனேப் பெற உரிமையில்லை யென்பதைச் சொல்