பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மதுரைக் குமானுர் ைேர்கட்குரிய வாழிடமாகும். இக்குமானர் பிறந்து சிறத் தற்குக் காரணமாயிருந்த சிறப்பு இந்நாட்டிற்கு உரியது. ஆதலால், இதன் இயற்கை கலமும் பிற கலங்களும் சிறிது விரியக் காண்பதற்கு இலக்காகின்றன. ஒரு நாட்டில் ஒரு மகன் தோன்றி நாட்டவர் பலரும் சான்ருேனெனப் ப்ாராட்டப் பெறுதற்கு அவனுடைய நாட்டியல்பும் சூழ் கிலேயும் பெருந்துணை செய்வனவாகும். பொறிகளின் வழியாக அவன் பெறும் முதற்காட்சி அவனது நாடே யர்தலின், அவனுடைய உள்ளத்திற்பதியும் அங்காட்டுக் காட்சி தன் வளத்துக்கும் பண்புக்கும் ஏற்ப வளவிய கருத் துக்களையும் உயரிய எண்ணங்களையும் தோற்றுவிக்கும். கொல்லன் மகன் உயர்ந்த கொல்லனதலும், தச்சன் மகன் தகவுடைய தச்சனுதலும் பொற்கொல்லன் மகன் கண் டோர் மருளும் கைவினையுடையணுதலும், கண்க்காயனர் மகன் வலிய புலமைக் கண்கொண்டு பிணக்கறுத்துப் பீடு பெறும் பெரும் புலவனுதலும் மேலே கூறிய இயற்கை கலத்தை அடிப்படையாகக்கொண்டு எழுவனவாகும். ஆகவே, மதுரைக் குமானுர் தோன்றுதற்கு இட மாகிய கோனுட்டின் இயற்கை கலங்களைக் காண்பது, இன்றியமையாததாயிற்று. சோழநாட்டிலுள்ள நாடுகள் பலவற்றினும் இக்கோெைடான்றுதான் இன்றுவ்ரையில் தனித் தமிழரசாக இருந்துவருகிறது. இக்காட்டை ஆண்டு வரும் வேந்தர் தமிழரசராவர். அவரது தாய்மொழி தமிழ் மொழி. அவர் தம் உள்ளமும் உரையும் தூய தமிழ் நெறியில் இயங்குகின்றன. இத்தமிழரசு கால்கொண்டு முந்நூருண்டுகள் கழித்துவிட்டன. இவற்றிற்கிடையே நாட்டின்கண் பழம்புள் போதலும் புதுப்புள் வருதலும் போலப் பல குடிகள் பிரிந்துபோகலும் புதுக்குடிகள் பல வந்து குடியேறுதலும் நிகழ்ந்ததனுல் நாட்டின் வாழ்க் கைக் கூறுகளில் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் உண் டாயின ; ஆயினும், அவற்ருல் சிறிதும் தாக்குண்டு திரிபு எய்தாது பண்டைத் தண்டமிழ்ப்பண்பு குன்ருது இக் கோனுட்டு வேந்தர்குடி சிறந்து கிற்கிறது. அரசியல்