பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மதுரைக் குமரனுர் - இந் நாட்டின் மேலைப் பகுதி மலேயும் குன்றுகளும் நிறைந்திருக்கிறது. குன்முற்று மலே, (குன்னுத்து மலே) விராலி மலை, ஆளுருட்டி மலே அன்னவாசல் மலை, குடுமியா மலை, கான் சாத்துமலை யென்பனவாகும். இந் நாட்டின் தென் மேலெல்லையில் பிரான் மலை நின்று இதனையும் இராமநாதபுர மாநாட்டையும் பிரிக்கின்றது. இவற்றுள் விராலிமலைக்குத் தெற்கிலுள்ள கொடும்பாளுர்க் குன்றினை முதுகுன்ற மென்றும், குடுமியான் மலையை நற்குன்ற மென்றும், பிரான் மலையைக் கொடுங்குன்ற மென்றும் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இங்காட்டின் இடை. யிடையே காடுகளும் உள்ளன. அவற்றின் பரப்பு நாற்று நாற்பது சதுர மைல் எனக் கணக்கிட்டுள்ளனர். இக் காடுகளில் மான், காட்டுப் பன்றி, முயல் முதலிய விலங்கு கள் வாழ்கின்றன. காடுகள், மழைவளத்துக்கும் பொருள் வருவாய்க்கும், ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கும் ஆக்க மாதல் பற்றி, இத் தனி பாசு இவற்றைப் பேணிப் புரிந்து வருகிறது. - இப் புதுக்கோட்டை வளநாட்டில் நாம் குறிக்கத் தக்க வகையில் பல காட்டாறுகள் உள்ளன. இவற்றுள் வெள்ளாறும் பாம்டாறும் சிறப்புடையவாகும். இங் நாட்டின் மேற்கேயுள்ள மருங்காபுரி நாட்டு வேழமலையில் தோன்றி, இந் நாட்டின் குறுக்கே கிழக்கு நோக்கி யோடி மணமேற்குடிக்கருகே கடலில் கலந்துவிடுவது வெள்ளாறு. இதனுல் இக் காட்டின் குளத்துர் நாடும் ஆலங்குடி நாடும் திருமய நாட்டினின்றும் பிரிக்கப்படுகின்றன. பாம்பாறு திருமய காட்டு மேலுர்ப் பகுதியைச் சார்ந்த பெருங் துறைக் குளத்தின் வழிகாலாய்த் தோன்றி இந் நாட்டின் தன்கிழக்கை நோக்கிச்சென்று அறந்தாங்கிக் கருகே வெள்ளாற்ருேடு கலந்து ஒன்ருகி, சிறித தாரம் சென்று மறுபடியும் பிரிந்து தென்கிழக்காக ஒடி ஐந்து கிளேக ளாகப் பிரிங் த கடலை படைகின்றது. ஏனையவை குண்டாறு, அஞ்ஞானவிமோசனி, உய்யக்கொண்டான் அம்புலி, கோரையாறு, ம னிமுத்தாதி பென்பன