பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடுை 45 பூரார், கன்னடியர் காலத்துப் பல வரிகளால் வந்த பொருளுக்குப் பண்டார உடலில்லாமையால்' (P. S. Ins. 310) நிலம் விற்பதாகக் கூறுவதும், இங்காட்டில் வல் ல்ாளதேவன் இறைகொண்ட நாளில் கன்னடியர் எங்களைச் சிறைப்பிடித்ததில், சிறைமீள எங்களால் ஒரு செய்தி யில் 'லாமையால் பூ பண்டாரத்தில் காங்கள் திருவாபரணங் . களே அற விற்றுக்கொடுத்துச் சிறைமீட்கையில், பின்பு இம்முதல் எங்களால் இறுக்க வொண்ணுமையால் இக் கோயில் நாயனுர்க்கு நிலம்விட்டுத் திருச்குலக்கல் நாட்டி விலப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தோம்' (P.S. Tns 548) என்பதும், முன்பு எழுதின பிரமாணம் கலகத்தில்ே சேருகையால், இற்றைகாளிலே’ (898) பிரமாணம் செய்து கொடுத்தோ மென்பதும் பிறவும் இடைக்காலத்தே இக் காட்டவர் அரசுநிலையின்மையால் பல துன்பங்கட்குள்ளான தம், அவற்றினின்று மீளுதற்குச் செய்த முயற்சிகளும் ஒருவாறு உணரப்படும். - ஊர்களில் தேவரடியார்கள் மிக்குக் கோயிற் பணியிற் போட்டியிட்டுப் பிணங்கும் பிணக்குகள் உண்டாயின. இப் பிணக்கொன்று இக்கோனுட்டுக் கூழைக்குளத்துளில் உண் டாயிற்று. ஊரவர் ஒன்று கூடினர். தேவரடியார்க்குரிய 'திருப்பாட்டடைவு, திருவாலத்தியெடுத்தல், மெய்க்காட் டடைவு முதலிய திருப்பணிகளே இனிது ஆற்றற்கு ஏழு முறைகளை வகுத்து ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு முறை வகுத்தமைத்தனர். (P. S. ins 162) சைவ வைணவர்களுக் கிடையே புண்டான பிணக்கொன்று திருமெய்யத்தில் தீர்க்கப்பெற்றுள்ளது. பள்ளருக்கும் ைற ய ரு க் கு மிடையேயுண்டான வழக்கொன்று (P. S. ins. 929) நெய் யிலே கைதோய்த்துக் கானும் முறையால் நீதி காணப் பட்டுளது. - வாணிகஞ்செய்வா ரிடையேயும் ஒருவகை உடன் படிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. திருகலக்குன்ற முடைய காபனுர்க்கு ஆண்டொன் ஆக்கு முப்பதினுயிரம் பாக்கும் எழுதாற்றைம்பது கட்டு வெற்றிலேயும் வேண்டி