பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 - மதுரைக் குமரனுர் இனி ஊர்களில் உள்ள கோயில்களுக்கு நாடோறும் நடைபெறும் திருப்பணி குறித்துப் பொருள் வருவாய் போதிய அளவில் இல்லாதவிடத்து, ஊரவர் தங்கள் சமு காயத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒருவகை முறை வகுத்திருந்தனர். நார்த்தாமலைக்கு இடைக்காலத்தே தெலுங்ககுலகாலபுரம் என்று பெயர் வழங்கிற்று. முதற் குலோத்துங்கன் காலத்தில் இதற்குக் குலோத்துங்க சோழ பட்டினம் என்ற பெயர் உண்டாயிற்று. பிற்காலத்தே அப்பெயரே வழங்கி வந்தது. பதின்மூன்ரும் நாற்ருண் டின் தொடக்கத்தில் இருந்த சுந்தர பாண்டியன் காலத்தில் இக்குலோத்துங்க சோழபட்டினத்தார் திருமால் கோயி லில் பதினெண் பூமி.விண்ணகாப்பெருமானையும் பிரட்டி யாரையும் எழுத்தருளுவித்தனர். அவர்கள் திருப் போனகத்துக் காகக் குடி வேகாத் திருவிடையாட்ட ’ மும் ஏற்படுத்தினர். திருப்பணிக்கு வகை செய்ய முற் ப்ட்டுத் திருமணங்களில் ஒரு வருவாய் முறை கண்டனர். : இந்தக் கோயில் திருப்பணிக் குடலாக வைத்துக் கொடுத்த பரிசாவது கண்ணுலத்துக்கு........................ பெண்ணின் வீட்டில் காசு நூற்றிருபது, ஆடைக்குக் காசு எண்பதுமாகக் காசு நூறு, அண்ணன் வீட்டில் காசு எண் பது, கிடாய்க் காசு துர்றும், விளக்கத் தரையன் வாங்கிக் கொடுத்துக் கண்ணுலம் செய்யக் கடவதாகவும் : பெண் பிள்ளைகள் தாமத்தியம் வந்தால் ஆடையும் மாழையும் தவிர்த்துத் தங்களுக்கு என்ருகக் கொடுக்கும் காசு தாற் றிருபதும் வாரியம் வாங்கித் திருப்பணிக்குடலாக இக் கோயில் திருவடி பிடிப்பான் கையிலே ஒடுக்கக் கடவதாக வும் ' (P. S. ins, 281) என்று அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. இக்காட்டவர் தங்களைப் புரக்கும் வேந்தர்பால் பேரன்பும் பெரு மதிப்பும் கொண்ட்ொழுகினர். கி. பி. 1212-ம் ஆண்டில் மூன்ருங் குலோத்துங்க சோழன் மதுரைக்குச் செல்லக்கருதித் தன் கீழ் வாழும் தலைவர்கட் குத் தெரிவித்தான். அவர்களுள் ஒருவ்ன் மணியன்