பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடுை 53 நோய் தீர்க்கும் மருத்துவர்க்கு வேண்டும் சிறப்புக்களைச் செய்திருக்கிருர்கள். திருவர்ன்குளத்துக் கேர்யி லில் சீகாரியம் செய்வோரும் கண்காணி செய்வார்களும் தேவ கன்மிகளும் கோயிற் கணக்கரும் பிறரும் கூடி, அவ்வூர் மருத்துவன் ஆத்திரேயன் சேந்தராயனை கிம்பவின் வைத்தியனருக்கு இறையிலியாக கிலம் விட்டனர். இச் செய்தி திருவான் குளத்துக் கல்வெட்டில் (P. S. 725) காணப்படுகிறது. இதல்ை வேருென்றும் அறியலாம். கோயில் காரியம் பார்த்த பெருமக்கட்கு அக் கேயில் காரியத்தோடு ஊர் மக்கட்கு வேண்டும் மருத்துவ வுத விக்கு வேண்டுவன செய்வதும் கடமையாக இருந்திருக் கிறது. மருத்துவ வுதவிக்குக் கோயிற்குரிய நிலம் பயன் படுத்தப்படுவது இக்கால அரசியல் அறிஞர் குறிக்கொள் ளத் தக்க செய்தியாகும். இடைக்காலத்தே வாழ்ந்த செல்வர்கள் கூத்தும் பாட்டுமாகிய தமிழ்த்துறையினை நன்கு பேணினர். குளத் துர் நாட்டுத் திருவேங்கைவாசலில் அக் காட்டு வேந்தனன் சதுரன் இராசனை குலோத்துங்க சோழக் கடாரத்திரை பன், இவ்வூர் வேங்கை வாயிலாண்ட நாயனர்க்கு ങ്ങഖ്ട്. சித் திருவிாதிரைத் திருநாள் கொண்டாடுமாறு ஏற்பாடு செய்து அங்காளில் அதுவகைத் கூத்தும் ஆடுமாறு செய் தான். இதனை அவன், திருவேங்கைவ்ாயிலாண்டார் கோயிலில் நான் எழுந்தருளுவித்த சதுரவிடங்க நாய்கர்க்கு வைகாசித் திருவாதிரைத் திருநாளுங்கண்டு திருநாளுக்குக் கூத்தாடுகைக்குக் காணியாகத் திருவேங்கைவாயில் சபை' யார் பக்கல் விலைகொண்டு வரியில் இறையிழிச்சிக் கொண்ட சருகிலி வயலான புரவரிவயல்” என்றும், “இத்திருநாளுக்கு ஆறுகூத்து ஆடுவாராகவும், விளையிலும் விளையாவிடிலும் இக்கூத்தாறும் ஆடக்கடவராகவும்” (P. S. 189) என்று கல்வெட்டித் தங்துள்ளான். இவ் வாறே சித்திரைத் திருநாளுக்குக் கூத்தாடுகைக்குச் சாங் திக் கூத்தாடுகிற எழுநர்ட்டுங்கை யென்பவளுக்கு இவ். வேங்கை வாயில் ஊரவர், கூத்தாடுகைக்கு கிலம் விட்டு,