பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோளுடு §7 சிற்றரையன் சுந்தாராசன் என்பான், பாடுவார் பத் திரம் பிடிப்பார், குடவர் கோவனவருடன் செளந்தர ராசன் மண்டபத்து இருந்து நம் சடகோபன் பாட்டுக் கேளாகிற்க, நம் சேனுடதி விண்ணப்பத்தால் நம் வீட்டுக் காரியம் செய்யும் கோவணவன் ஆத்திரேயகோத்திரத்து திருவனந்தாழ்வார் பாலிகை தேவாளிதாசருக்கு சருவ மானியம்' (P. S. ins, 791) என்று கல்வ்ெட்டித் தரு மிடத்துச் சடகோபர் அருளிய திருவாய் மொழியை ஒது வதைக் குறிப்பதால் திருவாய்மொழி ஒதுதலும் நிகழ்ந் தன என்று அறியலாம். இனி, இடைக்காலத்துககு முற்பட்ட காலத்தைக் காணலாம். சங்கவிலக்கிய காலத்துக்கும் இடைக் காலத் துக்கும் நடுவேயுள்ள காலநிலையைத் தெரிந்து கொள்ளுதற் குப் போதிய கருவிகள் இல்லை. சிலப்பதி காரத்தில் இளங் கோவடிகள் கொடும்பாளுரைக் குறிக்கின்ருர், காவிரியாற் றைக் கடந்து மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் ஒருநாள் ஒர் இளமரக்கானத்திருக்கை யெய்தியிருந்தனர். அவரெதிரே மறையோன் ஒருவன் போந்து அவர்கட்கு மதுரை மூதூர்க்குச் செல்லும் வழியியல்புகளைக் கூறினன். கூறு பவன் இக்கோனுட்டுக் கொடும்பாளுரைக் குறித்து, அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முற்ைபடக் கிடந்த இக் நெடும்பேர் அத்தம் ந்ேதிச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோ னேந்திய 'அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும் என்று கூறினன். காவிரியின் வடகரை வருவோர் திரு வரங்கத்தே காவிரியைக் கடந்து உறையூரின் நீங்கிக் கொடும்பாளுர் சென்று, ஆங்கே பிரியும் மூன்று நெறி களைக் காணலாம் என்பது இங்கே காட்டிய பாட்டடிகளால் மறையோன் உரைக்கும் கருத்தாகும். கொடும்பை யென் பது கொடும்பாளுரின் சுருக்கமான பெயர்; இவ்வாறே