பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மதுரைக் குமானர் உயிர்விடும் உயர்கொள்கை கைம்மேற் கனி யெ ன த் தோன்றி நல்லறிவை விளக்கும். வெயில் வெம்மை மிகு மிடத்து கிலத்தில் இருக்கும் பயிர் பச்சைகள் பசுமை இழந்து வாடி வதங்குவது கானும் குமரனுர், உண்ண உணவின்றி வாடும் ஏழை மக்களை கினைந்து ஏங்குவார். இவற்ருேடு தொடர்பில் லாத முகில் காற்றைத் துணையாகக்கொண்டு கடற்குச் சன்று மண்ணுருேமாகாத அக்கடல் நீரின் உப்பாகிய மாசுநீக்கி முகந்துவந்து, வாடிய பயிர்கட்கு மழையாய்ச் சொரிந்து வாழ்விப்பது குமரனர் கண்களுக்கு அறிவு விருந்து செய்யும். . இவ்வாறு இயற்கைக் காட்சியில் நிகழும் நிகழ்ச்சி ஒவ்வொன்றும் குமரனுர்க்கு இயல்பாகவே கூரிதாய்த் திகழும் அவரது அறிவை ஒளிபெருகச் செய்தது. உள். ளம் புலமை நலத்தால் சிறப்பதாயிற்று. அவர் வாயி னின்று வரும் சொற்களெல்லாம் இனிய பாட்டுக்களாய்” மலர்ந்தன. உள்ளமும் உரையும் மேன்மேலும் சிறக்கு மாறு அவருடைய செயல்களும் சீர்பெற்றன. அவர் தம் பெற்ருேர்க்கு நெடிதிருந்து அவரது வாழ்க்கை நலம் கண்டு இன்புறுதற்கு வாய்ப்புக் குறைந்தது. அவர்கள் முதுமையில் மிகுந்து மேலோருலகம் புகுந்தனர். குமர ஞர்க்குச் சான்ருேர் கூட்டுறவின்கண் வேட்கை மிகுவ தாயிற்று. அக்காலத்தே மதுரைமூதூர் தமிழ்ச்சான்ருேர்க் குச் சீர்த்த உாைவிடமாய் விளங்கிற்று, வணிகர், வேளா ள்ர், மருத்துவர், அரசர் முதலிய பலரும் நல்லிசைப் புலமையுடையாாய்த் திகழ்ந்தனர். ஆங்காங்கு வாழ்ந்த சிற்றரசரும் பேரரசரும் இச்சான்ருேர்க்குப் பெருஞ் சிறப்பு நல்கிப் பேணி வந்தனர். சான்ருேர் பலரும், 'யாதும் நமக்கு ஊர்; எத்திறத்தோரும் நமக்குக் கேளிர்; நமக்கு வரும் இன்பமும் துன்பமும் நாம் செய்யும் வினை யால் வருவன; ஆதலால் இன்பத்திற் களித்தலும் தன் பத்தில் அவலித்தலும் அறிவுடைமைக்கு இழுக்கு என