பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மதுரைக் குமானுர் அச்சம் கீழ்மக்கட்கு உரிய செயல். ‘அச்சமே கீழ்க ளது ஆசாரம்' என்பது திருக்குறள். உயிர்கட்கு நலமும் ஆக்கமும் உறுதியும் புகழும் தாத்தக்கவற்றை ஒதுவதற்கும் செய்வதற்கும் இடையே யுண்டாகக்கூடிய இடையீடுகட்கும் இடையூறுகட்கும் அஞ்சும் அச்சம் ஒருவர்க்கு உரிமையன்று ; பழிபாவங்களே அஞ்சத் தகுவன. ஏனை நல்வினை செய்தற்கு அஞ்சுபவன் கீழ் மகனுவான். உயர்வடைதல். ஒவ்வொரு மகனுக்கும் மகட்கும் உரிமை வினையாதலால், அதற்குத் துணையாகும் அஞ்சாமை எல்லார்க்கும் ஒப்ப்வேண்டிய உரிமையாகும். எல்லாருள்ளும் சான்ருேர்பாலுள்ள, அஞ்சாமை, நாடு, புரக்கும் பெருவேந்தர்கள்பால் அவர் சொல்லிலும் செயலி லும் தோன்றி அவர்கட்கும் அவர் குடைகிழற்கண் வாழும் மக்கட்கும் தீங்குபயக்கும் குற்றங்களை அவர் முன்னே கின்று விளங்கவுரைத்து நன்னெறிப்படுத்தற்குப் பெரிதும் புயன்படுவதாகும். இதனை அக்கால வேந்தர் நன்கறிந்து 'செவிகைப்பச் சொற்பொறுக்கும் வேந்தராய், சான் ருேர் முதலாயினர்க்கு அச்சமின்றி வாழும் உரிம்ை வழங்கியிருந்தனர். பாண்டிவேந்தனை அறிவுடை நம்பி மெல்லியனுய்க் குடிகளிடத்தில் மிக்க இறையை வரிசை யறியாத சுற்றத்தாரை விடுத்துத் துன்புறுத்திப் பெற முயன்ருனுகப் பிசிராங்தை யென்னும் சான்ருேர் சென்று. அவனது தவற்றை அஞ்சாது கூறி நன்னெறிப்படுத்தி னர். பெண்ணுெருத்தி செய்த சிறுபிழை பொருது சான்ருேர் விலக்கவும் விலகாது கொலைபுரிந்த நன்னஇனப் பலரும் அஞ்சாது பழித்தனர்; அவன் வழிவந்தோரை நன்னன் மருகனை யென எள்ளினர். இனி, இச் சான்ருேர் நாட்டில் செல்வர் சிலரும் இல்லாதவர் பலருமாய் இருந்த நிலையைக்கண்டு, செல்வர்க் கும் இல்லாதவர்க்கும் இடையே பகைமையும் அதுவாயி லாகத் தீங்கும் உண்டாகாவண்ணம், செல்வத்துப் பயன் ஈதல்’ என்பதை வற்புறுத்தி அவரது செல்வக்கொடை யால், கொடுத்தோர்க்குப் புகழும் கொடை பெற்ருேர்க்கு