பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலம் 5 அரசர்க்கே புரியவெனக் கருதினர். தங்கள் நல்வாழ் வுக்கு அரசவேலி யல்லது வேறு வேலி இல்லையென உணர்ந்து குடிக்குக் குடியாகவும் படைக்குப் படையாக வும் வாழ்ந்தும் பயன்பட்டும் வந்தனர். அவருள் வலியால் தலைவராயினவர் தம் வேந்தர்க்கு வினை வேண்டு வழி அறிவு உதவியும், படைவேண்டு வழி வாளுதவியும் வக் தனர். அவர் வலிமுற்றும் அறிவு ஆண்மை பொருள் படை என்ற நான்கு கூருக அமைந்திருந்தது. அறிவு வேண்டி நல்ல கல்வி கற்றலும், ஆண்மை வேண்டிப் படைப் பயிற்சி பெறுவதும், பொருள் வேண்டி உழவு முதலிய தொழில் களே வளர்த்தலும், படைவேண்டி மக்கட்கு நன்னடை பயிற்றுதலும் செய்து வந்தனர். அறிவுடைய மக்க்ளேத் தேர்ந்து சிறப்பித்து அவர் கூறிய அறிவு நெறி பற்றியே அரசு செலுத்தினர். - கிலப்பகுதியைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று நால்வகையாகப் பகுத்து அவ்வங்கிலத்து மக்கள். ஆங்காங்கு விளையக்கூடிய விளைபொருளே விளத்தனர். இங்கிலத்து மக்கட்கிடையே பண்டமாற்றுதலும் அதுவே வாயிலாக வாணிகம் செய்தலும் சிலவியிருந்தன. கடற் கரைப் பகுதியில் வாழ்ந்தோர் கலங்களில் தம் காட்டு மிக்க பொருளைப் பிறநாடுகட்குக் கொண்டுசென்று வாணிகம் செய்தனர். வேற்று காட்டுப் பொருள்களும் நம் கர்ட்டில் இறக்குமதியாயின. உள் நாட்டுப் பொருள்கள் காலிலும் (வண்டியிலும்) வெளி நாட்டுப் பொருள்கள் கலத்திலும் சென்றன. இருவகையாலும் இயங்கும் வாணிகப் பொருள் கட்கு அரசியல் சுங்கம் விதிப்பதும் உண்டு. உள்நாட்டு வணிகர்க்குக் கள்வரால் தீங்குண்டாகாவாறு படை யமைத்துவிடுப்பதும் கடற்கொள்ளைக்காரரை படக்குதற் குக் கடலில் கலஞ்செலுத்திச் சென்று பொருதழிப்பதும் பண்டைக் கமிழ் வேந்தர் அரசு முறையாகக் கொண்டிருந் தனா. பொருள்வளம் மிகுவது குறித்து நாட்டிலுள்ள காடு களே அழித்து நாடாக்கினர் ; கிலம் பள்ளமான இடங்