பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- 66 மதுரைக் குமானுர் வரசின் அமைச்சியல் முதல்வரும், அமெரிக்க நாட்டு அரசியற்றலைவரும் அட்லாண்டிக் கடல் நடுவே கூடி உலகமக்களின் நல்வாழ்வுக்கு இந்நால்வகை உரிமைகளும் இன்றியமையாது வேண்டப்படுவன என முடிவு செய் தனர். இவற்றை அட்லாண்டிக் சார்ட்டர் என்று கூறுவர். அச்சத்தடை, வறுமைத்தடை, பேச்சுத்தடை , சமயத்தடை என்ற நால்வகைத் தடைகளின்றி மக்கள் இவற்றில் தனியுரிமையுடையவராக வேண்டுமென்பது அட்லாண்டிக் சார்ட்டர். சமய வழிபாடு சமுதாயத்தைக் கட்டுப்படுத்தாது அவரவர்க்கும் தனியுரிமையாய் இருந்தமையின், சங்க காலத் தமிழகத்தே விளங்கியிருந்த சமயம் இன்னதென இதுகாறும் தெளிய விளங்கிற்றிலது. சான்ருேர் சமய நிலையைத் தம் பாடல்களிற் குறியா தொழிந்தனர். ஊர்களில் நடக்கும் விழாக்களில் பல சமய வாதிகளையும் வருவித்துத் தத்தம் சமயப் பொருள்களை எடுத்தோது. மாறு ஏற்பாடு செய்திருந்தனர். பெரு நகரங்களின் புறத்தேயிருந்த சேரிகளில் சமயச் சான்ருேர்கள் வாழ்ந் திருந்தனர். காவிரிப்பூம்பட்டினத்து நிகழ்ந்த இந்திர, விழாக்காலத்தில் ஒட்டிய சமயத் துறுபொருள் வாதி கள், பட்டி மண்டபம் பாங்கறிங் தேறுமின் ' என்று பணிக்கப்பெற்றனர். வ ஞ் சி நகரின் புறஞ்சேரியில் அளவை வாதியர், சைவவாதியர் முதல் பற்பல சமய வாதிகள் வாழ்ந்தனர். காஞ்சியம் பேரூரில் சமண சான் ருேர்களும் பெளத்த நெறிப் புலவர்களும் மிக்கிருந்தனர். அவருள் தருமபாலரென்னும் தமிழ்ச் சான்ருேர் வட நாட்டு காலந்தாவிலிருந்த பல்கலைக் கழகத்தில் தலைமை நிலை பெற்று மேம்பட்டனர். திக்காக ரென்னும் தமிழர் வடநூற் புலமை மிக்குத் தருக்கநெறியறிவில் உயர்வற உயர்ந்து வடகாட்டில் மாண்புற்றுத் திகழ்ந்தனர். அருத்த சாத்திரம் எனப்படும் பொருணுால் வகுத்த சாணக்கியனும் தமிழகத்தா னென ஆராய்ச்சியாளர் கூறுவர். பட்டாசாரி யன் கொள்கையை நிறுவிய குமரிலபட்டரும் தமிழ் நாட்