பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மதுரைக் குமரஞர் மையும் கண்கொள்ளாப் பேரழகும் படைத்த காரிகை யொருத்தி வாழ்க்கைத் துணையாய் அமையினும், அவள்பா லுண்டாகும் காதலினும் ஒருவற்குத் தன்னைப் பெற்ற தாய்பாலுண்டாகும் பேரன்பு விஞ்சி நிற்பது போலக் குமானுர்க்குச் சோழநாட்டின்பால் உண்டான அன்பு வலி பெற்று கின்றது. குமாருைம் சோழநாடு சென்றுவர முற்பட்டார். * மதுரைக் குமரனர் சோழநாடு சென்றுவர விரும் பினவர் மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்து வந்த பாண்டி யன் பெருவழுதியைக் கண்டு தம் கருத்தையுரைத்து விடைபெற்ருர் இப்பெருவழுதி மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்தே குமானுர் இல்லாத காலத்தே உயிர் துறந்தான். இதனுல் இவனைப் பிற்காலச் சான்ருேர் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி எனச் சிறப்பித்தனர். இவன் காலத்தே சோழநாட்டில் உறையூரில் இருந்து ஆட்சி புரிந்தவன் பெருந் திருமா வளவன் என்பான். இவன் பிற்காலத்தே குராப்பள்ளி யென்னுமிடத்தே இறந்தமைபற்றி இவனைச் சான்ருேர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று பாராட்டினர். பெருந்திருமாவளவனுக்கும் பெருவழுதிக்கும் நட் புண்டு. ஒருகால் இவ்விருபெரு வேந்தரும் ஒரிடத்தே கூடியிருந்தனர். இருதிறத்தாருடைய அரசியற் சுற்றத் தாரும் ஒருங்கே குழுமியிருந்தனர். இவர் கம் போர்ச் சிறப்பைப் போர்க்களம் பாடும் பொருநர் இன்பமுறப் பாடி யேத்தினர். பாணர் இசைக்கருவிகொண்டு இன் னிசை பாடினர்; விறலியர் தம்முடைய ஆடலும் பாடலும் அழகும் காட்டி இன்புறுத்தினர். நல்லிசைப் புலமை சிறந்த புலவ்ர் பலர் அம் மகிழ்ச்சி யவையில் மேவியிருந் தனர். அக்காலத்தே காவிரிப்பூம்பட்டினத்தவரும் சிறந்த நல்லிசைச் சான் ருேருமாகிய காரிக்கண்ணனுர் அவ் வவைக்கண் இருந்தனர். இருபெரு வேந்தரும் ஒருங்கே கட்டாற் பிணிப்புற்று இனிதிருப்பக்கண்டதும் அவர்