பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேக்தர் தொடர்பு 73 உள்ளத்தே இவ்விருவரும் பிரியா நட்பினராய்ப் பின்னங் திருப்பின் தமிழகத்தின் பெருமை பெருகல மெய்துமென் பதைத் தெளிந்தார். அதனுல், இருவரையும் நோக்கி, வேந்தர்களே ! நீவிர் இருவீரும் ஒருவர்க்கொருவர் துணையாய் வாழ்வீராயின், இம்மாநிலம் உங்கள் கையகப் படுவது பொய்யாகாது. எங்கள் இடையே புகுந்து நல்ல போலவும் நயமுடையன போலவும், தொல்லைப்பெரியோர் மேற்கொண்ட நெறியின போலவும் சொற்களைச் சொல்லி துங்களிடையே பிளவை யுண்டுபண்ணுவோர் உளராவர். அவர் கூறுவனவற்றைக் கொள்ளாது இன்றுபோல என் றும் பிரியா நட்பினராகுமின் இவ்வாருயின், நாடு முழு தும். உங்கள் கருத்துப்படியே இயலும் ' என அறிவுறுத் தினர். இவ்வாறு அறிவுறுத்தின கண்ணனர், பெருவழுதி யின் பெருமையினைப் பெரிதெடுத்துப் பேசி வளவனே மட்டில் முன்னிலைப்படுத்தி, நீயே தண்புனற் காவிரிக் கிழ்லனே' என்றும், நீயே அறம் துஞ்சும் உறந்தைப் பொருநனே' என்றும் பாராட்டியுள்ளார். நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியன; வரைய சந்தமும் திரைய முத்தமும் எளியன அல்ல; பிறர் எல்லார்க்கும் அரிய எனச் சிறந்து.மேம்படுபவன், தமிழ்கெழு கூடலில் வைகும். திண் பாண்டி வேந்தன் என வுரைத்து, அவன் நட்பு மிகச் சிறந்ததெனக் குறிப்பித்துரைத்தார். இருவரும் முறையே பலராமனும் கண்ணனும் ஒப்பரென மொழிந்து, அவர் தம் நிறத்தை யெடுத் தோது முகத்தால் வளவன் வெள்ளையுள்ளம் படைத்தவன் என்றும், வழுதி மனத் திட்பமுடையனென்றும் குறித்தார். வளவன் ஏதிலார் கூறும், நல்ல போலவும் நயவ போலவும் உள்ள சொற் சுளுக்கு எளிதில் இரையாவன் என்பது தோன்ற அவற்றை விரியக் கூறினர். கள்ளமறியும் திறமின்றி வெள்ளேயுள்ளம் படைத்த வளவன்பால், உறையூரிலிருந்து மருத்துவப்புலமை யாலும் நல்லிசைப் புலமையாலும் வீறுபெற்றிருந்த