பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மதுரைக் குமரனுர் ஈது ' என்பதை அறிவுறுத்த வேண்டுமெனத் துணிந்தார். அதற்குரிய செவ்வி நோக்கிச் சிலநாள் தங்கினர். ஒருநாள் பெருந்திருமாவளவனக் காண்டறகேற்ற செவ்வி வாய்த்தது. கொக்கினும் கூர்த்த செவ்வி நோக்க முடையர் நம் மதுரைக் குமானுர். வேந்தன் அவைக்கட் புகுந்தார். தமக்குக் குறிக்கப்பெற்ற இருக்கையில் இருந் தார். வளவன் படைச்செருக்குமிக்குத் தன் திரு முகத்தை அவர்பால் திருப்பி மைந்துமலியும் பார்வை யுடன் தன்னை முந்துற்றுச் செம்மாந்து நோக்கும் செங், தமிழ்ப்புலவரைக் கண்டான். அவனது மைந்துமலி பார்வை மழுங்குமாறு, மதுரைக் குமரனர் எழுந்து கின்ருர். அரசனையும் அரசியற் சுற்றத்தாரையும் நோக்கினர். கண் களில் புலமையொளி பொங்கித் திகழ்ந்தது. திருவாய், முறுவலித்தது. பெரும எனப் பேசத்தொடங்கினர். வேந்தனுக்கும் ஆங்கு வீற்றிருந்த பிறருக்கும் வியப்பு. உடன் பிறந்தது. - பெரும, நம் தமிழகத்தில் பேரூர் வேந்தரும் உளர்; சிறார் வேந்தரும் உளர். பேரூர் வேந்தர்பால் பெருஞ்: சோற்றுவளம் உண்டு ; அதுகொண்டு அவராற் பேணப் படும் பெரும்படையுண்டு. அதன் கண் காற்றெனக் கடி. தேகும் கடுவிசைக் குதிரைகள் பல்; கொடியணிந்து விளங்கும் குன்றுபோலும் தேர்களும் பல ; கடல்போற் பரந்த படை வீரரும் பலர்; மலை மலைந்தன்ன மால்யானை களும் பல ; இவைகொண்டு உடற்றும் போரில் மறத்தீக் கிளர்ந்தெழ ஆக்கி உருமென முழங்கும் முரசுகள் எண். னில. இப்படை நலத்தால் வென்றி மேம்படும் பேரூர், வேந்தரை யாம் கண்டுளேம்; அவர் மார்பிலும் தோளி லும் விளங்கும் மறப் பூண்களையும் கண்டுளோம்; அவர் முடிமேல் கவிந்து தண்நிழல் செய்யும் வெண்குடையும் க்ண்டுளேம் ; மேன்மேற் பெருகும் அவரது விறல்கெழு செல்வத்தையும் யாங்கள் கண்டுளோம் : அவருள், இக் நால்வகைப் படையும் ஒருங்கே சிறக்கப்பெற்ற பேரூர் வேந்தர் அரியர். சிலர், குதிரையும் தேருமாகிய படைப்