பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முடிவேந்தர் தொடர்பு 77 பெருமையால் வீறு பெறுவர் ; சிலர் களிறு மறவரு மாகிய படைப் பெருமையாற் சிறப்புப் பெறுவர் ; சிலர் தமது முரசும் ஆண்மையுமாகிய பெருமையால் மேம் படுவர்.” இங்ானம் பெருமையால் மைந்துற்று வேறு வேறு திறத்தால் வென்றி மேம்படுவராயினும், பேரூர் வேந்தாது வெண்குடைப் பெருஞ் செல்வத்தை எம் போலும் தமிழ்ப்புலவர் ஒரு பொருளெனக் கருதமாட் டார். அவர் பொருளெனக் கருதி வியத்தற்குரியது படைப் பெருமையும் அன்று ; அதனுல் ஈட்டப்படும் செல்வப் பெருமையும் அன்று. - வளி நடந்தன்ன வாச்செலல் இவுளியொடு கொடி நுடங்கு மிசைய தேரினர் என அக் கடல் கண்டன்ன ஒண்படைத் தானேயொடு மலைமாறு மலுைக்கும் களிற்றினர் எனஅ உரும் உாற்றன்ேன உட்குவரு முரசமொடு செருமேம் படுஉம் வென்றியர் எனஅ மண்கெழு தானே ஒண்பூண் வேந்தர் - வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே' . அஃதாவது, இவ் வேந்தர், காற்றுப்போற் கடிது தாவிச் செல்லும் குதிரையொடு கொடி பணிந்த தேர்களால் சிறப்பு மிக்கவரென்ருே, அவ் வேந்தர், கடல் போலும் மறவ. ருடன் மலைபோலும் யானைப் படைகொண்டு மாண்புறுபவ. ரென்ருே, இவர் முரசு முழங்கு தர்னேயால் அரசுக்கள் வென்று மேம்படும் ஆண்மை மிக்கவரென்ருே எம் டோல் வார் வியந்து பாராட்டும் வெறியர்கள் அல்லர் என்பது. இனிச் சீறார் வேந்தராவர் யாவரெனில் கூறுதும். பேரூர் வேந்தர் போலப் பெருஞ் சோறு விளக்கும் நன் செய் வயல்கள் சிறார் வேந்தர்கட்கு இல்லை. மிகத் தாழ்ந்த சிறார் வேந்தர், புன்செய்களே மிகவுடையராவர். அவற் றில் மிகுதியும் விளைவது வரகு அச் செய்ப்புறத்துப் படப்பைகளில் முள்வேலி இடப்பட்டிருக்கும். படப்பை யில் முஞ்ளுைக்கொடி (முன்னேக்கொடி) முளைத்துப் படர்ந்திருக்கும். மான்மறிகள் (மான் கன்றுகள்) துள் யோடி முன்னேயின் மெல்லிலையை மேயும். எ ஞ் சி