பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேந்தர் தொடர்பு 79 எங்கள் மானத்தைக் காத்து எங்களைப் புரப்போருடைய தமிழ்ப் பண்பைப் பாராட்டியே வாழ்வோம். பாடறிந்து ஒழுகும் பண்புடையராகிய நல்லறிஞர் மிக்க வறியாாயி லும், அவரது வறுமை எங்கட்குப் பேரின்பம் தரும்; அவரது நல்லறிவே எங்கள் பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் சிறந்த பொருளாவதாம். - மிகப்பே ரெவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை யுள்ளோ.. நல்லறி வுடையோர் நல்குரவு 3. உள்ளுதும் பெருமயாம் உவந்து கனிபெரிதே, ! இங்ங்னம் மதுரைக் குமானுர், தமிழ்ப் பண்பும் புலமை மறமும் தழைத்துத்தோன்ற உரைத்தபேருரை யைக் கேட்ட பெருந்திருமாவளவனுக்குத் தன் தவறு புலனுயிற்று. வெட்டித் தள்ளிய பின் கிட்டியழுவாரைப் போல் வளவன் வருத்தினன். குமரனர் பின்னர் அவன் பால் விடை பெற்றுக்கொண்டு, காவிரியின் வடக்ரை வழியே காவிரிப்பூம்பட்டினம் சென்று சேர்ந்தார். அக் காலத்தே காவிரிப்பூம்பட்டினம் மிக்க சிறப். புடன் விளக்கமுற்றிருந்தது. சோழர் குடியில் தோன்றிய நலங்கிள்ளி சேட் சென்னி யென்பான் அங்கேயிருந்து சோழநாட்டின் கீழ்ப்பகுதியை ஆண்டு வந்த்ான். சோழன் கலங்கிள்ளிக்கு மகனுதலால் அவன் நலங்கிள்ளி சேட்சென்னி யெனப்பட்டான். காவிரிப்பூம்பட்டினத் தில் அரசன் கோயிலைச்சார இலவந்திகைச்சோலை யொன் றண்டு. இலவந்திகை யென்பது நீராவி. இதன் கரையில் பல்வகைப் பூ மரங்களும் செடிகளும் கொடிகளும் கிறைந்த சோலே யுண்டு. அதனுல் இஃது இலவந்திகைச் சோலே யெனப்படும். வேனிற் காலத்தே வேந்தர்க்கு இச்சோலே தண்ணிய கிழலையும் மன்றல் கமழும் தென்றலையும் நல்கி இன்புறுத்தும். இச் சோலே நடுவே உயரிய அரசுறை கோயிலுண்டு. இது வெளியே தோன்ரு வண்ணம் சோலையிலுள்ள மங்கள் தழைத்து மூடிக் கொண்டிருக்கும். இக் கோயிலே இலவந்திகைப்பள்ளி