பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மதுரைக் குமரனர் யென்பர். பிற்காலத்தே சோழன் கலங்கிள்ளி சேட் சென்னி போர்ப்புண்பட்டு இப் பள்ளியிடத்தே இருந்து உயிர் துறந்தான். அதனல் அவனே இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி யென்று சான்ருேர் பாராட்டி யுரைப்பாராயினர். . மதுரைக் குமானுர் தன்னைக் காண்டல் வேண்டி வந்த திறத்தைச் சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி யறிந்து நன்கு வரவேற்று அவர்க்குரிய சிறப்பைச் செய்து அவரைத் தன் நகரத்தே சில நாள் தங்கியிருக்கு மாறு வேண்டினன். சேட் சென்னி புலவர் புரவல்னுய்த் தன்பால் பேரன்பு கொண்டொழுகுவது கண்டு குமானுர் பெரிதும் இன்புற்று அவ்வாறே தங்கியிருந்தார். குமரனர் காவிரிப்பூம்பட்டினத்தே தங்கி யிருக்கை யில் அடிக்கடி சோழ நாட்டின் சிற்றார்கட்குச் சென்று நாட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளைநேரிற் கண்டு இன்புற்ருர் காட்டவர்.பால் நிக்ழும் ஒவ்வொரு செய்" கையும் அவருடைய கூர்த்த பார்வையைக் கவர்ந்தது. சோழ நாடு நீர் நாடாதலால் வயல்களில் தொழில் புரியும் உழவர் செயல்களையும் இளஞ்சிருர்களின் சிறு விளையாட் டுச் செயல்களையும் தனித்து நோக்கிப் பயின்ருர், உழவுத்தொழில் புரிபவர் கெற்சோறமைத்து உண்னும் முறையும், செல்விளேத்து நெற்பயன் கொள்ளும் முறையும், பிறவும் மதுரைக்குமரனுருடைய புலமையுள்ளத்தில் நன்கு நெல் வயல்ககளில் களையெடுக்கும் தொழிலைக் கடை சியர் செய்தனர். தலையில் கொண்டையும் இடையில் தழையும் விளங்க, வயலில் களே யெடுக்கும் அக் கடைசியர் உருவும் செயலும் குமரனர் கண்ணைக் கவர்ந் தன. நெல் வயலில் நெற் பயிரோடு வேறு அந்நெல்லையே போலும் புல்லும் ஆம்பலும் முளைத்தப் பூத்திருந்தன. புல்லும் ஆம்பலும் நெற்பயிர்க்குக் களேயாய் இடையூறு செய்வன வாதலின், அவற்றை யறிந்து மகளிர் நீக்குவது முறை. வரம்பு சார்ந்திருக்கும் வாய்த்தலைகளில் நெய்தல்