பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மதுரைக் குமரனர் யில்லை. சென்னியை நினைக்கும் போதெல்லாம் அவ லுடைய அகன்றுயர்ந்து, இந்திர வில் போல மாலை கிடந்து விளங்கும் மார்பும் துண் போல் உயர்ந்து விளங்கும் தோளும் வாளேந்தி மாண்புறும் பெரியகையும் அவர் உள்ளத்தில் தோன்றி உவகை பெருகுவிக்கும். அவனுக்கென்று இயற்றப்படும் தேர்கள் பல், கர்ண் பார்க்கு அவனுடைய போராண்மையைப் புலப்படுத்தின. சென்னியின் அறிவுப் பெருமையும் ஆண்மைப் பெருமை யும் படைப் பெருமையும் கண்டு துனுக்குற்ற வேந்தர் சிலர், அவனே யடைந்து வணங்கி அவனது தண்ணிய அருளைப் பெற்று இன்பமே நிலவ வாழ்ந்தனர். அவர் கட்குப் பகைவரால் இடுக்கண் நேர்ந்தபோதெல்லாம் சேட் சென்னி தன் படையுடன் சென்று அவர்கட்குத் துணைபுரிந்து அவ் விடுக்கணக் களைந்து இன்புறுத்தின்ை. அவர்களும் இன்பம் குன்ருத இனிய வாழ்க்கையில் திளைத் திருந்தன்ர். - - இச் செயல்களைக் காணக் காணக் குமருைக்குச் சென்னிபால் பெருமதிப்பும் போன்பும் பெருகின. இவற்கு வினைவேண்டுவழி அறிவுதவியும் படைவேண்டு. வழி வாள் உதவியும் வந்த தானேத் தலைவருள் எனுதி திருக்கிள்ளி யென்பவன் சிறந்தவனுவன். அவனது. நட்பும் நம் மதுரைக் குமாருைக்கு உண்டாயிற்று. சோழன் பெருந்திருமாவளவனுல் உண்டான இவரது மனக்குறையும் இச் சென்னியின் தொடர்பால் அறே நீங்குவதாயிற்று. - மதுரைக் குமரனர் சென்னியின் நாட்டு நலங்களைக் கண்டு இன்புற்று வருகையில், ஒருகால் நாட்டிடையே நல்லிசைச் சான்ருேர் சிலரைக் கண்டு அளவளாவி மகிழ்ந் தார். அவர் கூட்டத்தில் சோழன் சேட் சென்னியின் போர்ப்புகழ் பற்றிய பேச்சுண்டாயிற்று. நாடெங்கும் வேந்தர்கள் அடிக்கடி போர் புரிவதே தொழிலாக மேற் கொண்டிருந்த காலத்தில் சான்ருேரிடையே வேந்தர் களின் போர்ச் செயல்கள் பொருளாகப் பேச்சு விகழுமே