பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முடிவேந்தர் தொடர்பு 85. யன்றி வேறு பொருள் பற்றிப் பேசுதற்கு இடமேது ? வென்ருேர் விளக்கமும் தோற்ருேர் தேய்வும் மக்கள் உள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. காவிரிப்பூம் பட்டினத்தில் வேந்தன் அவைக்கண். இருந்து நல்லிசைப்புலமை நடாத்தும் மதுரைக்குமரனர் நலங்கிள்ளி மகனுன சேட்சென்னியின் போர்ச்சிறப்பை யறிந்திருப்பரென்பதில் ஐயமில்லை. அவற்றை யறிந்தோர், போரைத் திறம்பட நடத்தற்கு வேண்டும் கருவிகாலம், இடம், படைவலி, துணைவலி, வினவலி, தோள்வலி முதலிய கூறுகளைப் பலரும் அறிய வெளிப்ப்ட மொழி வது முறையன்று. ஆயினும் அவர்கள் பொதுவாக உள்ள வலிமிகுதி வெளிப்படக் கூறுவது தடையாகாது. அஃது ஒற்றர் செவிப்பட்டு வேற்று வேந்தரையடையி, லும், அவர் அஞ்சித் தாம் கொண்ட போர்க் கருத்து மாறுதற்கு ஏதுவாழுர்தலால், அதனைப் பெரிதும் சிறப்பித் தோதுவது பொதுமீக்கூற்ருய்ச் சான்ருேர்க்குக் தகுவதும் ஆயிற்று; இம் மீக்கூற்றம் மக்கள் மனத்திலும் கலக்கம் பிறப்பியாது அரசன்பால் தண்மையும் தெளிவும் அமைந்த பற்றினைப் பிறப்பித்தலால் நல்லதோர் அறமுமாகக் கருதப். . .lتيتي سابيس السا மதுரைக்குமானுர் சிென்னியின் மறமாண்பின்ச், சான்ருேரும் பிறரும் அறியப் பொதுமீக் கூற்ருக உரைப் பது அரசற்கு ஒாாற்ருல் ஆக்கமும் தமக்கு அறமு மாதலே நன்குணர்ந்திருந்தார். அதனல், அவர் அந்தச் ச்ான்றேர் களே நோக்கி, சான்ருேர்களே, நம் சேட் சென்னியுடன் பொரக்கருதும் வேந்தர் இனி உளராகார் ; ஒரு சிலர் உள ராயின், அவர்கள் அதனல் த மக்கு வாக்கடவ" தீங்கினே அவர் தாமே அறிவர். யான் அறிந்த அளவில் கூறுவன் ; கேண்மின்: அவனெடு பகைத்துப் பொருத வேந்தர் உயிரொடு மீண்டு சென்று வாழ்ந்தது மில்லை; அவன் துணை வேண்டியும் அருள் வேண்டியும் வழிபட்ட வேந்தர் வருந்தக் கண்டதும் இல்லை” என்ருர்.