பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 மதுரைக் குமானுர் - இக் கருத்தையே மதுரைக்குமானுர் ஒரு பாட்டு வடிவில் பாடி வேந்தன் சேட் சென்னியைச் சிறப்பிக்க எண்ணினர் ; காவிரி காட்டில் கண்ட காட்சிகளும் அவர் மனக் கண்ணில் தோன்றின. கேட்போர் உள்ளக்கிழியில் சொல்லோவியந் தீட்டுந் தீவிய சொற்களால் ஒரு பாட் டமைத்து, கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்ப லொடுகட்கும் மலங்கு மிளிர் செறுவில் தளம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி டுேகதிர்க் கழனிச் சூடுதடு மாறும் வன்கை வினைஞர் புன்தலைச் சிரு.அர் தெங்குபடு வியன்பழம் முனையின் தங்தையர் குறைக்கண் நெடும்போ ாேறி விசைத்தெழுந்து செழுங்கோட் பெண்ணைப் பழக்கொட முயலும் வைகல் யாணர் கன்னட்டுப் பொருநன் х எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி சிலேத்தார் அகலம் மலைக்குநர் உளரெனின் தாம்அறி குவர்தமக் குஉறுதி : யாம்அவன் எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலேங்கோர் வாழக் கண்டன்று மிலமே தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல் அதனினும் இலமே' என்று பாடினர். திருவோலக்கத்தே நல்லிசைச் சான் ருேர் சுற்றமும் அரசியற் சுற்றமும் சூழ வீற்றிருந்த வேங் தன் சேட்சென்னி, செவி குளிர்ப்ப, உளமுவப்ப, உடல் தளிர்ப்பக் கேட்டு இன்புற்ருன். தனது தமிழ் நலஞ் செறிந்த மனக்கண்ணுல் தன்னுட்டின் வயல்நலமும், தென்னே பனை முதலியவற்றின் பழநலமும், நெல்விளே வின் நெடுகலமும், உழவர் கடைசியரது வாழ்க்கை நலமும் வனப்புறக் சண்டான் ; தன் தோணலமும் மார்பு நலமும் கைந் நலமும் கவினக் கண்டான்; தன்னெடு பொருது சாய்ந்தோர் தளர்வும் துனேபெற்றுத் தானிழல் வாழ் வோர் நல்வாழ்வும் நன்கு தோன்றின. உள்ளத்தே