பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முடிவேந்தர் தொடர்பு 87 அவனுக்கு இன்ப வெள்ளம் பெருகிற்று. தன் குடி வரவும் தகுதியும் எண்ணினன். மதுரைக் குமானுநது வரிசையையும் மனத்தால் அளந்தறிந்தான். அவர்க்குப் பெருஞ் செல்வத்தைப் பரிசிலாக அளித்துத் தன் தமிழ்க் குடிப் பண்பைத் தகவுற மேம்படுத்தான். பெருவளம் நல்கப் பெற்ற குமானுர் சின் னுள் சோழன்பால் தங்கி யிருந்து பின்னர் அவனிடம் பிரியா விடைபெற்றுச் சோ நாடு நோக்கிச் சென்ருர், சேரநாடு முடியுடை வேந்தர்களான சேரமான்களுக்' குரிய தென்றும், அந் நாட்டில் குடநாடு, குட்டநாடு முதலாகப் பல உண்ணுடுகள் உண்டென்றும் முன்பே கூறியுள்ளோம். குட்டநாட்டு வேந்தர் குட்டுவர் எனப் படுவர். சேரநாட்டு மன்னருள் வலியும் புகழும் பெற்று மேம்பட்டவன் சேரமான் என்ற சிறப்புடனே முடி குடும் தலைமை யெய்துவன். ஏனையோர் முடிசூடா மன்னராவர். மதுரைக் குமரனுர் சேர நாடு நோக்கி வந்தபோது, குட்டுவர் வழித் தோன்றலான கோதை யென்பான் வலியும் புகழும் மிக்குற்று முடிசூடும் மாண்பு பெற்றுச் சேரமான் குட்டுவன் கோதையென விறுபெற்றிருந் தான். குமரனர் வரக்கண்டதும், சான்ருேர் சால் பறிந்து பேனும் சான்ருேர் மெய்ம்மறையாகிய, குட்டு வன் கோதை அவரை வரவேற்று அன்பு பெருகும் நன் மொழி வழங்கிச் சிறப்பித்தான். குமரனர் அவ்ன்பால் சின் னுள் தங்கினர். - - குட்டநாடு மேடு பள்ளங்கள் நிறைந்தது. மேடுகளிற் பெய்த மழைநீர் பள்ளங்களை யடைந்து தேங்கி கிற்கும், அங் நீர்நலத்தாற் காடுகள் தழைத்து வளம் மிகுந்திருந்தன. மேட்டுப் பாங்களில் இடையர் வாழ்ந்து வந்தனர். மேய்ச்சல் நலத்த்ால் இடையர் செல்வமாகிய ஆனிரைகள் வளம்பெருகித் திகழ்ந்தன. பல்லான் திரளும் பாற்பயனும் நாளும் பெருகுதலால் அவ்விடையர் மிக்க செல்வமுற்று மேன்மை யெய்தியிருந்தனர். வரகு, துவரை, கம்பு, பயறு முதலிய கூலங்களே விளப்பதும் அவர்களது