பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேர்கர் தொடர்பு 91 என்று இசை நலத் தோன்றப் பாடிக் கூறினர். உடை பார்பால் இல்லாதார் செல்லுமிடத்து நிமிர்ந்த தலையும் எடுத்த மார்பும் பெருமித நடையும் கொண்டு செல்வது கருதும் பயனை விளைவியாது என்பர் அறநூலார் எனினும், செந்நாப் புலமை படைத்த இரவலர்க்கு இஃது இயல்பாதலால், இதல்ை அவர்கட்குத் தடை யொன்றும் உண்டானதில்லை யென்பார், அண்ணுந்து புகுதல் இரவலர்க்கு எளிது’ என்று குறித்துரைத்தார். இச் சொற்களைக் கேட்ட இரவலர், அற்றேல், யாங்கள் சென்ற விடத்தெல்லாம் வேந்தர் பலரும் சேர மான் குட்டுவன் கோதையை இங்ங்னம் கூறினரே? இதற்குக் காரணம் யாதாகலாம்? என வினவினர். குமானர், அது கேட்டதும் குறுமுறுவல் கொண்டார். காரணமும் உண்டென்பார் போலத் தமது தலையை யசைத்தார். பின்னர்ப் புலமை வழங்கு ம் அருமை வாயைத் திறந்து, 'யான் முன்னே சொன்னபடி அவ அடைய மூதாருட் புகுதல் இரவலர்க்கு மட்டில் எளிது, "எளிதே' எனத் தொடங்கி, அவன் இரவலரைப் புரப்பதைக் கடகை மேற்கொண்டு, கைம்மாறு நோக்காது மழையைப் பெய்யும் வானமும் நானுமாறு தன்பால் வந்த இாவலர் அனைவருக்கும் வேண்டுவனவற்றை வரையாது. - வழங்கும் வன்மையுடையவன். விரைந்து செ ல் லும் குதிரைகள் பல அவன்பால் உண்டு ' என்ருர். இச் சொற்களைச் செவிமடுத்த ஏனே இரவல ருள்ளத்தில் அக் கோதைபால் அன்பு பெருகுவதாயிற்று. அஃது அவர்கள் முகத்தில் விளங்கித் தோன்றிற்று. குமரனர் மேலும் கூறலுற்று, ' இத்தகைய வண் மையையுடைய குட்டுவன் கோதை மிக்க வலி பொருந்திய பெரிய கையையுடையன். அவனது காட்டிற் புகுகல் இரவலர்க் கெளிகேயன்றிப் பிறர்க்கு எ னி த ன் று. அவனெடு மாறுபட்டுப் பொாக் கருதிய வேந்தர்க்குப் புகுவது மிகவும் அரிது. அவனைப் பகைத்தெழுந்த மன்னர், நிகழ்த்திய வஞ்சினம் பொய்யாக நெடுமொழி