பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மதுரைக் குமரனர் மன்னராயினும் அவன் முன்னே, ஆடு மேய்க்கும் இடையறை ஒப்பர்; அவரது தானே ஆடுகளை ஒக்கும்; அவன் புலியை யொப்பன் ; அவனது நாடு இடையன் தன் ஆட்டினத்தோடு புகுதற்கு அஞ்சும் புலி துஞ்சும் காட்டை யொக்கும்’ என்பார். . . . இரவலர்க் கெண்மை யல்லது, புரவெதிர்ந்து வானம் காண வரையாது, சென்ருேர்க்கு ஆனது ஈயும் கவிகை வண்மைக் கடுமான் கோதை துப்பு எதிர்ந்தெழுந்த நெடுமொழி மன்னர், நினைக்குங் காலே, பாசிலேத் தொடுத்த உவலைக் கிண்ணி மாசுண் உடுக்கை மடிவாய் இடையன் சிறுதலே யாயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத் தற்றே வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே. - - என்று பாடினர். யாவரும் மகிழ்ச்சிகொண்டு கைகோட் டிப் பார்ாட்டினர். ஒவ்வொரு சொற்ருெடரையும் பன். முறை ஒதி யோகிப் பொருட்சுவை தேர்ந்து உவகை யுற்றனர். இடையனுடைய கண்ணியும் உடையும் பற்றி, வினவெழுந்தபோது, குமர ர்ை குட்டநாட்டிடையன் இயல்பெனக் கூற, யாவரும் மகிழ்ந்தனர். இரவலர்க்குக் கவிகையும், இகல்கொண்டு போரெதிரும் புரவலர்க்குத் தடக்கையும் சேரமான் குட்டுவன் கோதையுடையன் என்றதும், தலைமக்கள் செல்லும் நெறி தவறுடைத்தாயி லும் மருது பின்செல்லும் இயல்பு தோன்றத் தானேயைச் சிறு தலையாயம் (ஆடுகள்) என்றதும் சான்ருேர்க்கு மிக்க இன்பம் தந்தன. பாணர் இப்பாட்டிற்குப் பண்ணமைத்து கெஞ்சிற்கொண்டு, யாழும் குழலும் தண்ணுமையும் பிறவும் வழி நிற்ப மிடற்ருற் பர்டினர். யாவரும் என்று ஈன்றெனப் பாராடடினா. இங்ங்னம் சிறிதுபோது சொல்லாடி இன் புற் ற சான்ருேர் தத்தமில் விடைபெற்று நீங்கினர். மதுரைக் குமரனர் தம்மொடு போந்த எனச் சான்ருேருடன் தமது நாடு நோக்கி வாலானுர் சேரமான் பால் ஆற்றுப்படுக்கப் பட்ட சான்ருேர் கூட்டம் குட்டநாடு நோக்கிச் சென்றது.