பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேந்தர் தொடர்பு 93. சு. செல்வர் தொடர்பு மதுரைக்குமானுர் சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி பால் இருந்து வருகையில் அவனுடைய தானேத் தலைவர்க ளுள் ஒருவனை எனதி திருக்கிள்ளி யென்பவன் பெரும் புகழும் பெருவண்மையும் உடையவனுய் விளங்குவது கண்டும் கேட்டும் இருந்தார். நல்லிசைச் சான்ருேரும் போர்த்துறை வல்ல மறச் சான்ருேரும் திருக்கிள்ளியைப் பாராட்டிக் கூறினர். சோழவேந்தனும் அவனுக்கு எனுதி யென்னும் பட்டமும் அதற்குரிய எனதிக் கணையாழியும் தந்து சிறப்பித்திருந்தான். குமானர் சோழவேந்தன் சேட்சென்னிபால் விடை பெற்றுக்கொண்டு சேரநாடு சென்றபோது வழியில் இந்த ன்னுதி திருக்கிள்ளியைக் காண விரும்பி அவனுாருக்குச் சென்றிருந்தார். அவனும் அவரை நன்கு வரவேற்று அவர் வரிசைக்கொப்பப் பரிசில் தந்து பரவினன். குமானுர் அவனே முடிமுதல் அடிகாறும் உற்று நோக்கி 'ஞர், விழுப்புண் பட்டு வடு நிறைந்த முகமும், எரியெழ விழிக்கும் கண்னும், எழுவுறழும் தோளும், வாள் வடு, தழும்பிய மார்பும், தாளுற நீண்ட கடக்கையும், கழ லணிந்த அழகிய அடியும் வியப்புறக் கண்டார். இவனைப். பகைத்துப் பொருதழிந்த சீறார் மன்னரும் பேரூர், வேந்தருமாகிய பலரையும் கினைந்தார். அவர் உருவங்கள் குமாஞர் மனக்கண்ணில் தோன்றின. அவற்றைத் திருக். கிள்ளியின் உருவத்தோடு வைத்து எண்ணினர். அவ் வெண்ணம் மதுரைக் குமரனாது புலமை யறிவில் செப்ப மெய்தித் தீவிய இனியதொரு செந்தமிழ்ப் பாட்டாய் வெளிவந்தது. நீயே, அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர்கிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின் னயே