பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வர் தொடர் H 95 (ஈரோடை) டென்றும், ஈர்ந்துார் ஈஞ்சூரெனத் திரிந்து பின்பு ஈங்கூர் என்றும் இக் காலத்தே வழங்குகின்றன. அக் காலத்தே ஈர்ந்துர்ை கோயமான் என்னும் வேளாண் பெருமகற்கு உரியதாயிருந்தது. இக் கோயமானுடைய பெயர் தோயன்மாறன் என்றும் எடுகளிற் காணப்படு கிறது. கோயமான்கள் என்பது கொங்கு நாட்டில் பண்டை நாளில் வாழ்ந்த ஒரு குடியினர் பெயர். கோய, மான் புத்துர் பிற்காலத்தே கோயம்புத்துாராயிற்று. குடி கோயமான் குடியினரான கோயர் என்பது கோவியர், கோவர் என்பவற்றின் திரிபாகும். இடையர் என்பது கருத்து. சிலர் கோயம்புத்துார் என்பது கோச்ர்புத்துர் என்பதன் திரிபு என்கின்றனர். இக் கோயமான் பெருஞ் செல்வனல்லன். ஆயினும் வேற்படை கொண்டு பகைவரை வென்று அவர்பாற் பெறும் பொருளே இல்லார்க்கு வழங்கி, அவரது இன்மை தீர்த்து, அதனுல் அவர் எய்தும் இன்பம் கண்டு பெரிதுவக் கும் இயல்பினன். இவனுடைய இசையினை உடன் வந்த சான்ருேர் கூறக் கேட்ட குமானுர் ஈர்ந்துராடைந்து இவ. இனக் கண்டார். கோயமானும் அவரது புலமைச் சிறப் பறிந்து அன்பு மிக வரவேற்றுப் பெருஞ் சிறப்புச் செய் தான். ஈந்துாரில் தன்னுடைய செல்வ மனேக்கண் மது ரைக் குமானரைச் சின்னுள் தங்கியிருக்குமாறு கோய மான் வேண்டி யிருத்திக்கொண்டான். அங்ஙனம்ே தங்கி அவனுடைய குணஞ் செயல்களை நேரிற் கண்டறியும் வாய்ப்பு குமானுர்க் குண்டாயிற்று. இக் கோயமான், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனுக்குத் தான்ேத் தலைவனுய்ப் படை வேண்டுவழி வாளுதவும் மறமாண்புடையவன். சோழ வேந்தர்பால் போன்பும் பெருமதிப்பும் இவனுக்குண்டு. வேந்தர் மதிக்கத்தக்க பெருஞ்செல்வம் இவன்பால் இல்லை யாயினும் இவனுடைய போர் வன்மையும் படைப் பெரு மையும் அவர் செஞ்சில் நன்மதிப்பை யுண்டுபண்ணின. தனக்கு வேந்தனை சோழனுக்கு உள்ளம்போல உற்றுழி