பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மந்தரை சூழ்ச்சி


கைக் கூறிவிட்டாள், அவள் எண்ணம் நிறைவேற ஆரம்பித்து விட்டது என்று எண்ண வேண்டாம். கைகேயி மனத்திலும் மாறுபாடு ஏற்படவில்லை; அவள் முகத்திலும், மாறுபாடு ஏற்படவில்லை. ஆனால் கூனி அவள் மனத்தைக் கலைக்க மறுபடியும் ஆரம்பிக்கிறாள்:

'சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும்

நிவந்தஆ சனத்(து) இனி(து) இருப்ப நின்மகன்,

அவந்தனாய் வெறுநிலத்(து) இருக்க(ல்) ஆனபோது

உவந்தவா(று) என்?இதற்(கு) உறுதி யாது?' என்றாள்.

இது கேட்டும் கைகேயியின் மனம் அசையவில்லை. அதனால் கூனி மீண்டும் ஆரம்பிக்கிறாள். இங்கனம் திரும்பத் திரும்பப் பல விஷயங்கள் கூறிக்கொண்டே போகிறாள். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை அவள் அறிவாள்.

'மறந்திலன் கோசலை உறுதி, மைந்தனும்

சிறந்தனன் திருவினில், திருவும் நீங்கினான்

இறந்திலன், இருந்திலன், என்செய்(து) ஆற்றுவான் ?

பிறந்திலன் பரதன், நீ பெறுத லால் !' என்றாள்.

'சரதம்இப் புவியெலாம் தம்பி யோடும்இவ்

வரதனே காக்கு மேல், வரம்பில் காலமும்

பரதனும் இளவலும் பதியின் நீங்கிப்போய்

விரதமா தவஞ்செய விடுதல் நன்று' என்றாள்.

'பண்ணுறு கடகரிப் பரதன் பார்மகள்

கண்ணுறு கவினராய் இனிது காத்த அம்

மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில்

எண்ணுறப் பிறந்திலன், இறத்தல் நன்று !, என்றாள்.

'பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப் பண்(டு)

ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால்

தேக்குயர் கல்லதர் கடிது சேணிடைப்

போக்கிய பொரு(ள்) எனக்(கு) இன்று போந்ததால்.'