பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்தரை சூழ்ச்சி

9


கூனி சக்களத்தியின் உயர்வைக் கூறிப் பொருமையும் கோபமும் உண்டாக்க முயன்றாள். பரதன் இனித் தவம் செய்யக் காட்டுக்குப் போகவேண்டியதே என்று கூறி, புத்திர வாஞ்சை உண்டாக்க முயன்றாள். பரதன் அரசவம் சத்திலே பிறந்து என்ன பயன் என்று கூறி, குல உணர்ச்சி உண்டாக்க முயன்றாள். இவையெல்லாம் பயன்படாது போகவே, பரதனை வஞ்சிக்கத் தசரதன் சூழ்ச்சி செய்து விட்டான் என்று பொய் கூறத் துணிகிறாள். ஆனால், அப்பொழுதும் கைகேயி வேற்றுமையுற்றிலள். அதனால், கைகேயியைப் பார்த்துக் கூறாமல் பரதனைப் பார்த்துக் கூறுவது போல் கூற ஆரம்பிக்கிறாள் கூனி.

மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள்.

அந்தரம் தீர்ந்(து) (உலகு) அளிக்கும் நீரினால்,

தந்தையும் கொடிய(ன்), நற் றாயும் தீயளால்

எந்தையே பரதனே! என்செய் வாய் ?' என்றாள்.

மறுபடியும் கைகேயியை நோக்கி,

'அரசரிற் பிறந்துபின் அரசரில் வளர்ந்து

அரசரிற் புகுந்துபேர் அரசி யானநீ

கரைசெயற்(கு) அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்,

உரைசெயக் கேட்கிலை, உணர்தி யோ ?' என்றாள்.

'கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும்,

வில்வினை உரிமையும், அழகும், வீரமும்,

எல்லையில் குணங்களும் பரதற்(கு) ஏயது

புல்லிடை உகுத்(த) அமு தேயும் போல் !' என்றாள்.

இவ்வளவு கூறியும் இறைவியின் மனம் திரியவில்லை. கூனி சொல் கேட்கக் கேட்கக் கோபமே வளர்ந்து வந்தது,

வாய்க யப்புற மந்தரை வழங்கிய வெஞ்சொல்

காய்க னல்தலை நெய்சொரிந்(து) எனக்கதம் கனற்றக்