பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மந்தரை சூழ்ச்சி


கைகேயி சிவந்த கண்களோடு கண்டிக்கத் தொடங்குகிறாள். -

கேக யர்க்(கு) இறை திருமகள் கிள(ர்) இள வரிகள்

தோய்க யற்கண்கள் சிவப்புற நோக்கினள் சொல்லும்.

நெய் சொரிந்தால் நெருப்பு கொழுந்துவிட்டு எரிவது போல், கைகேயின் மனத்தில் கோபம் பொங்கி எழுந்துவிட்டதால், தான் கூறுவதைக் கேட்டுக் கூனி பிழை உணர்கிறாளா அல்லளா என்று கவனியாதவளாய், கடல் மடை திறந்தது போல் கண்டன மொழிகள் சொரிய ஆரம்பித்துவிட்டாள்,

'வெயில்மு றைக்குலக் கதிரவன் முதலிய மேலோர்!

உயிர்மு தற்பொருள் நிறம்பினு(ம்) முறைதிறம் பாதோர்;

மயில்மு றைக்குலத் துரிமையை மனுமுதல் மரபைச்

செயி(ர்) உறப்,புலைச் சிந்தையால் என்சொனாய், தீயோய் ?'

'எனக்கு நல்லையு(ம்) அல்லைநீ, என்மகன் பரதன்

தனக்கு நல்லையு(ம்) அல்லை,அத் தருமமே நோக்கின்,

உனக்கு நல்லையு(ம்) அல்லை, வந்து ஊழ்வினை தூண்ட

மனக்கு நல்லன சொல்லினை, மதியிலா மனத்தோய் !'

'பிறந்(து)இ றந்துபோய்ப் பெறுவதும், இழப்பதும் புகழேல்

நிறம்தி றம்பினும், நியாயமே திறம்பினும், நெறியின்

திறம்திறப்பினும் செய்தவம் திறம்பினும், செயிர்தீர்

மறம்தி றம்பினும், வரன்முறை திறம்புதல் வழக்கோ ?

ஆதலால்,

'போதி என்எ திர் நின்று ! நின் புன் பொறி நாவைச்

சேதி யா(து) இது பொறுத்தனன், புறம்சிலர் அறியின்

நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய்

ஆதி, ஆதலின் அறிவிலி, அடங்குதி!' என்றாள்.

ஆனால்,கூனி வந்த காரியத்தை முடிக்காமல் போவாளோ? கைகேயி, 'நாவைச் சேதிப்பேன்' என்று பயமுறுத்தினால் அதற்கு அவள் அஞ்சுவாளோ ?