பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மங்கரை சூழ்ச்சி

என்று கேட்கின்ருர் ஆம், அந்த அமுதத்தைப் பருகும் படி தமது பாக்களில் கிறைத்து வைத்து விட்டாரே கம்பர், அது போதாதோ என்று நாம் கேட்போம்.

மந்தரை சூழ்ச்சிக் காட்சி நடைபெற்று வரும்பொழுது இதுவரை நாடகாசிரியர் நாடக நடைக்குத் தடையாகத் தாம் ஒன்றும் கூறினரில்லே, ஆளுல் இந்த இடத்தில் தான் தம் அபிப்பிராயம் கூற முற்பட்டார். அவர் இதை எழுதாவிட்டாலும், நாடகம் பார்த்து கிற்கும் நாம், கம்மை அறியாமலே சிந்தை திரிந்துவிட்டதே! ஆல்ை இதில்லா விட்டால் இராமாயணம் ஏது, இராமன் புகழ் ஏது ?" என்று கூறுவோம், சந்தேகமில்லை. ஆதலால் நாடக மேடையில் கிகழாமல் நாடகம் பார்ப்பவரிடையில் நிகழ்வ தாகவே கொள்வோம்.

கைகேயி கூனி சொற்கேட்டதும் சிங்தை திரிந்தாள், அதல்ை முன்போல் வெகுண்டு நோக்காக விரும்பி கோக்கினுள் ;

எனஉ வந்தனை ; இனியைஎன் மகனுக்கும் ; அனையான்

புனேயு(ம்) நீள்முடி பெறும்படி புகலுதி ' என்ருள்.

இது கேட்டவுடன் கூனி அளவிலா ஆனந்தம் அடைக் தாள். என் தோழி வல்லள், என் துணை வல்லள்' என்று புகழ்ந்து கொண்டே, அரசியின் அடிகளைத் தொழுதாள் :

தாழும் என்.இனி என்உரை தலைநிற்பின், உலகம் ஏழும் உன்ஒரு பெருமகற்(கு) ஆக்குவென்' என்ருள். அது எவ்விதம் என்று கைகேயி கேட்கு முன்னரே,

நாடி ஒன்றுநன்கு) உரைசெய்வன் : தகுமணி அனயாய் ! தோடு)இ வர்ந்ததார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை ஆடல் வென்றியான் அருளிய வரம்.அவை இரண்டும் கோடி!' என்றனள்......