பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

மந்தரை சூழ்ச்சி



இனித்தான் கூனியின் சூழ்ச்சி ஆரம்பம். அந்தத் தீய காரியம் நிகழப்போவதால் அந்தக் காட்சியைக் காட்டுவதற்காகக் கவிஞர்,

இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்

என்று கூறி ' இருள் ' திரை யொன்றைத் தூக்குகிறார். இனி, சூழ்ச்சி செய்ய வந்துள்ள கூனியைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார். ஷேக்ஸ்பியர் போன்ற பண்டைக் கால நாடகாசிரியர்கள் நாடக பாத்திரங்களின் ஆடை ஆபரணங்களை மட்டுமே வர்ணிப்பார்கள், அவர்கள் குணங்கள் எல்லாம் அவர்கள் சம்பாஷணையிலேயே விளங்கும்படி செய்து விடுவார்கள். ஆனால் இக்காலத்து நாடகாசிரியர்கள் — இட்ஸன், ஷா போன்றவர்கள் — நாடக பாத்திரங்களின் ஆடை ஆபரணங்களை வர்ணிப்பதோடு, அவர்களின் குணங்களேயும் ஒரு சிறிது குறிப்பிடவே செய்வர். அவர்களுடைய முக வேறுபாடுகள் முதலியவைகளையும் குறிப்பதுண்டு.

நமது நாடகாசிரியராகிய கம்பர் தற்கால ஆசிரியர் வழக்கத்தையே அனுஷ்டிப்பதைக் காணலாம்.

மந்தரை தோன்றினாள் என்று கூறாமல் கூனி தோன்றினாள் என்று கூறுகிறார். அது மட்டுமா? உருவத்திலும் பெயரிலும் கூனியானவள் என்பதோடு, 'கொடுமனே க் கூனி—மனத்திலும் நேர்மையில்லாதவள் — என்று கூறுகிறார். அது போதும் அவள் வந்த விதத்தையும் அவள் குணத்தையும் கூறுவதற்கு. ஆயினும் அவள் மெய்ப்பாடுகளைக் கூறுவது அவசியமல்லவா? அதனால் அடுத்த செய்யுளில்,

தோன்றிய கூனியும் துடிக்கு(ம்) நெஞ்சினுள்,
ஊன்றிய வெகுளியாள், உளைக்கும் உள்ளத்தாள்,
கான்றெரி நயனத்தாள், கதிக்கும் சொல்லினுள்,