பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்தரை சூழ்ச்சி

3



என்று அந்த மூன்றுலகினுக்குமோர் இடுக்கண் மூட்டும் செயலில் புக நிற்கும் கூனியை வர்ணிக்கிறார்.

துடிக்கும் நெஞ்சோடும், கொதிக்கும் கோபத்தோடும் கண்களில் பொறி பறக்க வாய் குளறி வந்த கூனி என்ன செய்கிருள் ?

தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள்.

கைகேயியின் அரண்மனைக்குள் நுழைந்தாள் என்று கூறாமல் மண்டினாள் என்று கம்பர் கூறுகிறார். புகை மண்டி இருள் நிறைய ஒன்றும் கண்ணுக்குப் புலனாகாதது போல், இவள் அக்கோயிலினுள் மண்டி, கைகேயி மனத்தில் குழப்பம் உண்டாக்கி, அவள் அறிவைக் கெடுத்து அறம் புலப்படாவாறு செய்யப்போகிறாள் அல்லவா?

கூனி நுழைந்தாளே — எப்படி நுழைந்தாள் ?

தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்—
பண்டைநாள் இராகவன் பாணி வில்உமிழ்
உண்டையுண்டு) அதனைத்தன் உள்ளத்(து) உன்னுவாள்

இவ்விதம் பழயன நினைந்து கோபத்தைப் பெருக்கி, தீமை செய்ய உறுதிகொண்டு நுழைந்த கூனி கைகேயியை அடைந்தாள். கைகேயி எப்படியிருந்தாள், என்ன செய்து கொண்டிருந்தாள் ?

நாற்கடற் படுமணி நளினம் பூத்ததோர்
பாற்கடற் படுதீரைப் பவள வல்லியே
போற்கடைக் கண் அளி பொழியப் பொங்கணை
மேற்கிடந் தாள்தனை விரைவின் எய்தினாள்.

எய்தியவள் என்ன செய்தாள் ? மாளிகையுள் நுழைந்த வள் இடையில் நிற்காமல், காலந் தாழ்த்தாமல், நேராகச் சென்று கைகேயி படுத்திருந்த . பூவணையை விரைவில்