பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்தரை சூழ்ச்சி

5



மூண்டெழு பெரும்பழி முடிக்கும் வெவ்வினை
துாண்டிடக் கட்டுரை சொல்லல் மேயினாள்.

பாகத்கைத் தீண்டியாயிற்று, அவளும் உணர்ந்துவிட்டாள். இனி அவள் கண் விழித்து என்ன காரியம் என்று கேட்குமட்டும் காத்திருக்க முடியுமோ? உறங்கும் பொழுது திடீரென்று தீ என்று கேட்டால் மனங் கலங்கி எழுவது சகஜம். அதுபோல் திடீரென்று 'உனக்கு இடர்' என்று கூறினால் கைகேயியும் மனங் கலங்கி எழுவாள் என்று கருதி, கூனி கூறத் தொடங்கினாள்.

'அணங்குவாள் விடவரா அணுகும் எல்லையும்
குணங்கெடா(து) ஒளிவிரி குளிர்வெண் திங்களே
பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவா யல்லைநீ உறங்கு வாய்!' என்றாள்.

தானே பாம்புபோல் தீண்டிவிட்டாள். இனி இந்த விஷம் நிச்சயம் கொன்றே தீரும். ஆனால் கூனி கைகேயியைத் தீண்ட வேறு பாம்பு விளைந்திருப்பது போல் கூறுகிறாள். உனக்குப் பேரிடர் அணித்தாய் நிற்க, நீ உறங்குகின்றாயே! என்று கூறி எழுப்புகிறாள். ஆனால் கூனி கூறுவது போலவே, இராகு சமீபித்தாலும் சந்திரன் பிரகாசிப்பது போல், விடமனைய கூனி கூறியது கேட்டும் திடசித்தமுடைய கைகேயி,

வெவ்விடம் அனையவள் விளம்ப, வேற்கணாள,
'தெவ்வடு சிலைக்கைஎன் சிறுவர் செவ்வியர்
அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பலர்;
எவ்விடர் எனக்குவந்(து) அடுப்ப(து) ஈண்டு ? எனா,

'பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்
உராவரும் துயரைவிட்(டு) உறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேத மேஅன
இராமனைப் பயந்தஎற்(கு) இடருண் டோ?' என்றாள்.