பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்தரை சூழ்ச்சி

7



எப்படி மகிழ்ந்திருப்பாளோ, அப்படியே கைகேயியும் மகிழ்ந்தாள். இருவருக்கும் வேற்றுமை யில்லை. இந்த மங்கலச் செய்தி கேட்டுக் கோசலை, செய்தி கூறியவர்க்கு 'கன்னிதிக் குவை நல்கியது போல் கைகேயியும்,

ஆயபேர் அன்பெனும் அளக்கர் ஆர்த் தெழ(த்)

தேய்விலா முழுமதி விளங்கித் தேசுற(த்),

தூயவள் உவகைபோய் மிகச்சு டர்க்கெலாம்

நாயகம் அனையதோர் மாலை நல்கினாள்.

இந்த மாலை பெறவா கூனி அங்கு போனாள் ? இனியும் அதிகமாக மெதுவாகப் பேசமுடியுமோ? தன் மனத்தில் உள்ள யோசனையைக் கூறிவிட வேண்டாமோ? ஆனால் அதை எப்படிச் சொல்வது ? பட்டாபிஷேகம் சந்தோஷப் படக்கூடிய செய்தியா — தடுக்கப்பட வேண்டிய செய்தியா? இதை வாயால் கூறுவதினும் தன் மன நிலையைச் செய்கையால் கூறுவதே கைகேயின் மனத்தில் தைக்குமன்றோ ? அதனால்,

தெழித்தனள், உரப்பினள் சிறுக்கண் தீயுக

விழித்தனள் வைதனள், வெய்து உயிர்த்தனள்,

அழித்தனள், அழுதனள், அம்பொன் மாலையால்

குழித்தனள் நிலத்தைஅக் கொடிய கூனியே.

எவ்வளவு சாகசம் ! ஆயினும் கூனியின் மொழிகளும் செயல்களும் கைகேயியின் மனத்தில் வேதனை உண்டாக்கினவேயன்றி, பேத உணர்ச்சி ஒரு சிறிதும் உண்டாக்கவில்லை. ஆதலால் கூனிக்குப் பொறுக்க முடியவில்லே.

'வேதனைக் கூனி பின் வெகுண்டு நோக்கியே', கைகேயியிடம் கூறத் தொடங்குகிறாள்:

'பேதைநீ பேதின்றிப் பிறந்த சேயொடும்

மாதுயர் படுக,நான் நெடி(து)உன் மாற்றவள்

தாதியர்க்(கு) ஆட்செயத் தரிக்கிலேன்!' என்றாள்.

'என்றாள்' என்றதால் கூனி கூற வேண்டிய எண்ணத்