பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்கிறது என்பதை இன்று நாம் காண முடிகின்றது. மசகு எண்ணெயில் (Lubricant) நனைத்து நன்றாக ஊற வைத்த ஒரு துணியை வேறு வகையில் சலவை செய்ய முடியாது. ஆனால் நீர் நிறைந்த கண்ணாடித் தொட்டிக்குள் அதனைத் தொங்கவிட்டு வெளியே மிகு அதிர்வு ஒலியை உண்டாக்கி அத்தொட்டியின் பக்கம் செலுத்தினால் துணியிலுள்ள அழுக்கு நீக்கப்பட்டு துணி தூய்மை அடைகிறது. துணியைப் பற்றிய நீக்க முடியாத எண்ணெய்ப் பசையுடன் கூடிய அழுக்கையே புறத்தில் உண்டாக்குகிற மிகு அதிர்வு ஒலி போக்குகிறது என்றால், மனித மனத்திலுள்ள அழுக்கை மனமாசை ஏன் அந்த ஒலி போக்க முடியாது? ஒலியின் சிறப்பை அறிந்த நம் முன்னோர் மனமாசைப் போக்க இவ்வொலிகளைப் பயன் படுத்தினர். ஒலி, கேட்கும் ஒலி, கேளா ஒலி என இரு வகைப்படும். கேட்கும் ஒலியும் கேளா ஒலியும் அதிர்வுகளின் அடிப்படையில் தோன்றுபவைதாம். அதிர்வுகளின் எண்களைக் கொண்டு கேட்கும், கேளா என்று பிரிக்கிறோம். இவ்விரண்டைத்தான் இவ் விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானத்தோடு மெய்ஞ் ஞானத்தையும் அறிந்த நம் முன்னோர் கேளா ஒலிக்கும் அப்பாற்பட்டதென்று ஒர் ஒலியை அறிந்து அதற்கு ஆதிநாதம் (Pri-Mordial Sound) எனப் பெயரிட்டனர்.

ஒலியுண்டாக்காத பொருளே உலகில் இல்லை. எல்லா அசைவுகளும் ஒலி உண்டாக்கும். அணு தொடங்கி அண்டம் ஈறாக உள்ள அனைத்துப் பொருள்களும் சலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த சலிப்பில் ஒலி தோன்றத்தானே செய்யும். எல்லாவற்றுக்கும் மூலமாக உள்ளது அணு என்று சொல்லுகிறது விஞ்ஞானம். அந்த அணு, பரமாணு