பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 85 சென்று இறுதியாகச் சீடன் ஆசிரியரிடம் வந்தான். "ஐயா! இவைகளால் என்னால் பிரமத்தைக் கான முடியவில்லையே, வேறு எவ்வாறு பிரமத்தைக் காண்பேன்?” என இரங்கினான். "அப்படியா! பிரமம் எது என்ற உன் வினாவிற்கு நேதி (இது அன்று என்ற விடையைத்தான் கூற முடியும்” என்றார். நேதி என்ற சொல்லுக்கு இதுவன்று என்பது பொருள். இது பிரமமா? என்ற வினவினால் ஆம் என்ற விடை வரும். வினாவைச் சற்று மாற்றிப் "பிரம்மம் இதுவா?” என்றால் இது அன்று என்ற விடைதான் வரும். இரண்டு வினாக்களும் ஒன்றுபோல இருப்பினும் வேறுபாடுடையன. "இது பிரமமா' என்றபோது எங்கேயும் நிறைந்துள்ள பரம்பொருள் இங்கேயும் இருப்பதனால் "ஆம்" என்ற பதில் கிடைக்கிறது. 'பிரமம் இதுவா? என்று கேட்கும்போது ஆம்' என்று விடை கூறினால் இது மட்டும் பிரமம்; பிற இல்லை என்று ஆகிவிடும். ஆகையால்தான் பிரமம் இதுவா என்ற இரண்டாவது வினாவிற்கு இது அல்ல' என்ற விடை பொருத்தமுடையதாய் உள்ளது. இதனை "நேதி’ என்று கூறுகின்றனர். - பிள்ளையார் வைப்பதும், கொழுக்கட்டை படைப்பதும் ஒரு நிலை. பாரதி பாடிய முறையில் "காக்கைச் சிறகினிலே நந்தலாலா, உன்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா; தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று எங்கும் நிறைந்திருக்கின்ற பரம் பொருளைக் கண்டு உணர்ந்து அனுபவிப்பது மற்றொரு நிலை. அதற்குப் பிரமம் என்றோ சத்தியம் என்றோ இயற்கை என்றோ எப் பெயரையாவது இடுங்கள். அதுபற்றிக் கவலை இல்லை! ஆனால், பாரதி பாடிய பாட்டின் கருப்பொருளாக உள்ள